Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

சண்டித்தனத்தில் அல்ல இராஜதந்திரத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும் : மங்கள

T

The Leader Desk

மார்ச் 31, 2021 • 2:09 PM

சண்டித்தனத்தில் அல்ல இராஜதந்திரத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும் : மங்கள

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆம் ஆண்டில் ஐ.நா.வின் 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவது மற்றும் பிற விடயங்கள் குறித்து விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
  • இதேவேளை 30/1 தீர்மானத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை அமுல்படுத்துவதற்கு கணிசமான நடவடிக்கைகளை எடுக்க கடந்த அரசாங்கம் தவறிவிட்டதாக தற்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக தெரிவித்தார்.
  • இலங்கை அரசாங்கம் தனது இராஜதந்திரத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமே தவிர மோதலில் (சண்டித்தனத்தில்) அல்ல என குறிப்பிட்ட மங்கள சமரவீர, இராஜதந்திரம் ஊடாக அனைத்து வகையான தீர்வுகளுக்கும் விடை கிட்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
எழுத்து அளவு:

2015 ஆம் ஆண்டில் ஐ.நா.வின் 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவது மற்றும் பிற விடயங்கள் குறித்து விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கை அரசாங்கம் தனது இராஜதந்திரத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமே தவிர மோதலில் (சண்டித்தனத்தில்) அல்ல என குறிப்பிட்ட மங்கள சமரவீர, இராஜதந்திரம் ஊடாக அனைத்து வகையான தீர்வுகளுக்கும் விடை கிட்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் மற்றும் படுகுழியை நோக்கி விழும் இந்த தருணத்தில் கூட, வெளிநாட்டு உறவுகளை பேணுவது அவசியம் என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

இதேவேளை 30/1 தீர்மானத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை அமுல்படுத்துவதற்கு கணிசமான நடவடிக்கைகளை எடுக்க கடந்த அரசாங்கம் தவறிவிட்டதாக தற்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக தெரிவித்தார்.

இருப்பினும் நல்லிணக்கத்தை அடைவதற்கும் சுயாதீனமான நீதித்துறை பொறிமுறையை நிறுவுவதற்கும் படிப்படியாக பல நடவடிக்கைகளை நல்லாட்சி அரசாங்கம் எடுத்ததாகவும் மங்கள சமரவீர கூறினார்.

2019 இறுதி வரவுசெலவுத் திட்டத்தில், காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகளை வழங்க இழப்பீட்டு அலுவலகம் அமைக்கப்பட்டது என்றும் அதற்கு தற்போது அரசாங்கத்தில் உள்ளவர்கள் அன்று எதிர்க்கட்சியில் இருந்து இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்க அமைச்சரவை பத்திரம் ஊடாக நடவடிக்கை எடுத்தபோதும் மைத்திரிபால சிறிசேனவின் பல்வேறு கோரிக்கைகள் காரணமாக அது தாமதமானது என்றும் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சண்டித்தனத்தில் அல்ல இராஜதந்திரத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும் : மங்கள | Tamil Leader | We Lead the Nation