Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

சில கட்டுப்பாடுகளின் கீழ் இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்களை அனுமதிக்க டக்ளஸ் தேவானந்தா புதிய யோசனை!

T

The Leader Desk

மார்ச் 30, 2021 • 4:06 PM

சில கட்டுப்பாடுகளின் கீழ் இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்களை அனுமதிக்க டக்ளஸ் தேவானந்தா புதிய யோசனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சில கட்டுப்பாடுகளின் கீழ் இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
  • இந்த அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு, இலங்கை அரசாங்கத்திற்கு கட்டணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவிக்கின்றார்.
  • அனுமதி பத்திர நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தி, அதனூடாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க தான் யோசனை முன்வைத்ததாகவும் அவர் கூறுகின்றார்.
எழுத்து அளவு:

சில கட்டுப்பாடுகளின் கீழ் இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அனுமதி பத்திர நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தி, அதனூடாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க தான் யோசனை முன்வைத்ததாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த அனுமதி பத்திர நடைமுறையானது, நாட்டு படகுகளுக்கு மாத்திரமே செலுப்படியாகும் என அவர் குறிப்பிடுகின்றார்.

ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போட்டம் ட்ரோலரிங் படகுகளுக்கு இந்த அனுமதி பத்திர நடைமுறை செலுப்படியாகாது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இதைத் தவிர மேலும் பல யோசனைகள் காணப்படுவதாக கூறிய அவர், அவற்றில் இந்த அனுமதி பத்திர நடைமுறை ஒரு யோசனை எனவும் குறிப்பிட்டார்.

இந்த யோசனையின் கீழ், இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் மாத்திரமே இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்க யோசித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு, இலங்கை அரசாங்கத்திற்கு கட்டணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவிக்கின்றார்.

டக்ளஸ் தேவானந்தா

டக்ளஸ் தேவானந்தா

இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளின் முழுமையான கட்டுப்பாடுகளின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்க யோசனையை தான் முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

நாட்டு படகுகளில் மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவிக்கின்றார்.

நாட்டு படகுகளின் தடை செய்யப்பட்ட விதிமுறைகளின் கீழ் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படாது எனவும் அவர் கூறுகின்றார்.

அதேவேளை, போட்டம் ட்ரோலரிங் மீன்பிடி நடவடிக்கை முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை மீனவர்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையிலேயே இந்த திட்டத்தை முன்னெடுக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.

இலங்கை இந்திய மீனவப் பிரச்னை தொடர்பில், இலங்கை அரசாங்கம், தொடர்ச்சியாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...