Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

இலங்கையிடம் நீதியை வழங்கும் பொறிமுறையை சர்வதேசம் வழங்கியிருப்பது மிகவும் வேதனையான விடயம்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

T

The Leader Desk

மார்ச் 30, 2021 • 9:45 AM

இலங்கையிடம் நீதியை வழங்கும் பொறிமுறையை சர்வதேசம் வழங்கியிருப்பது மிகவும் வேதனையான விடயம்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
  • சர்வதேச நீதியை நம்பியே நாம் போராடிவருகிறோம் எனினும், ஜெனிவா தீர்மானத்தில் இலங்கைக்குஎதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கான நீதி தொடர்பாக எந்த பலன்களும் கிடைக்கவில்லை.
  • தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்….
எழுத்து அளவு:

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்….

எமது உறவுகளின் உண்மைநிலையை வலியுறுத்தி   மூன்றுவருடங்களிற்கும் மேலாக நாம் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். எனினும் எமக்கான நீதியினை எந்த ஒரு அரசாங்கமும் வழங்கவில்லை.      எமது உறவுகளைதருமாறே நாம் போராட்டங்களை முன்னெடுக்கின்றோம்.நாம் வேறு எதனையும் இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

எமக்கான நீதி ஒன்று கிடைக்கும் வரையில் நாம் இந்த போராட்டங்களை இடைநிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுப்போம். சர்வதேச நீதியை நம்பியே நாம் போராடிவருகிறோம் எனினும், ஜெனிவா தீர்மானத்தில் இலங்கைக்குஎதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும்,  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கான நீதி தொடர்பாக எந்த பலன்களும் கிடைக்கவில்லை. நாங்கள் இழப்பீட்டிற்கான அலுவலகத்தையோ, காணாமல்போன அலுவலகத்தையோ கோரி போராட்டம் நடாத்தவில்லை.

இதேவேளை குற்றம்செய்த குற்றவாளிகளிடம் நீதி கிடைக்கும் என்று நாம் எப்படி  எதிர்பார்க்கமுடியும். அந்தவகையில் இலங்கையிடம் நீதியை வழங்கும் பொறிமுறையை சர்வதேசம் வழங்கியிருப்பது மிகவும் வேதைனையான விடயமாகவே இருக்கிறது.

எனவே எமது துன்பங்களை தீர்த்துவைப்பதற்கான சர்வதேசநீதியை எதிர்பார்த்து நாம் காத்திருக்கிறோம். என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே,தமிழ்க்குழந்தைகளும் பயங்கரவாதிகளா,பாடசாலை சென்ற மாணவர்கள் எங்கே,அரசின் பொறுப்பற்ற பதில்களைகண்டிக்கின்றோம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...