Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

இறுதி யுத்தம் தொடர்பான சாட்சியங்கள் பிரித்தானியாவிடமே உள்ளன! பீரிஸ்

T

The Leader Desk

மார்ச் 29, 2021 • 6:25 PM

இறுதி யுத்தம் தொடர்பான சாட்சியங்கள் பிரித்தானியாவிடமே உள்ளன! பீரிஸ்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
  • போரின் இறுதிக்கட்டம் குறித்து உண்மையை கண்டறிய 2.8 மில்லியன் டொலர்களை செலவழிப்பதற்கு பிரித்தானியாவிற்கு எந்த அவசியமும் இல்லை.
  • போரின் இறுதிக்கட்டத்தில் 2009 ஜனவரி முதலாம் திகதி முதல் மே 19ஆம் திகதிவரை முழுமையான அறிக்கையொன்றை பிரித்தானிய அதிகாரி ஒருவர் தயாரித்துள்ளார்.
  • குறித்த அறிக்கையில் எந்த குற்றமும் படையினரால் இழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் பிரித்தானியாவிற்கு ஒரு சட்டமும் இலங்கைக்கு ஒரு சட்டமும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமுல்படுத்தப்படுவதாகவும் சாடியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

எமது நாட்டை இலக்கு வைத்து ஐ.நா கட்டமைப்பின் சட்டங்களை மீறி கொண்டுவரும் நடவடிக்கைகளை நாம் நிராகரிப்பதுடன், எமது நாட்டிற்கு ஆதரவளித்த நாடுகளுடன் இணைந்து எமது நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

எமது நாட்டிற்கு ஒரு சட்டமும் பிரித்தானியாவுக்கு இன்னுமொரு சட்டமே உள்ளது. போரின் இறுதிக்கட்டம் குறித்து உண்மையை கண்டறிய 2.8 மில்லியன் டொலர்களை செலவழிப்பதற்கு பிரித்தானியாவிற்கு எந்த அவசியமும் இல்லை. அவர்களிடமே சாட்சியங்களும் உள்ளன. போரின் இறுதிக்கட்டத்தில் 2009 ஜனவரி முதலாம் திகதி முதல் மே 19ஆம் திகதிவரை முழுமையான அறிக்கையொன்றை பிரித்தானிய அதிகாரி ஒருவர் தயாரித்துள்ளார்.

அவர் கொழும்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர். போரின் நடவடிக்கை குறித்து முழுமையான அறிக்கையை பிரித்தானியாவுக்கு அனுப்பிவைக்க அவருக்கு வழங்கப்பட்ட கடமையாகும். அன்டன் கேஷ் என்ற குறித்த நபர் ஸ்ரீலங்கா குறித்த பொறுப்புடையவர் அல்ல. அவர் பிரித்தானிய தூதரகத்தில் பணிபுரிந்தவர்.

அவரின் கடமை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு தெளிவான அறிக்கையை வழங்குதலாகும். அவர் இதனை சரியாக செய்தார். அறிக்கை இன்றும் உள்ளது. குறித்த அறிக்கையில் எந்த குற்றமும் படையினரால் இழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தின் முன் எந்த பிழையும் ஏற்படவில்லை என அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

குறித்த அறிக்கையை மறைப்பதற்கு அத்தனை முயற்சிகளும் எடுக்கப்பட்டன. இலங்கை குறித்த விவகாரம் பற்றி பேசுகையில் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இப்படிப்பட்ட பெறுமதியான சாட்சியமடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் நெய்ஸ்பி பிரபு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பேசியபோது உண்மையை அம்பலப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்.

பிரித்தானிய தகவல் உரிமை சட்டத்தின்படி அவர் மனுவொன்றை முன்வைத்த போது அதனை அந்நாட்டு அரசாங்கம் நிராகரித்துவிட்டது. 3 வருடங்கள் இதற்காக முயற்சித்த போதிலும் அறிக்கை முழுமையாக கிடைக்கவில்லை. ஆகவே இதன் உண்மை நிலவரம் என்ன? உண்மையை மூடிமறைக்கவும், அந்த நாடுகளின் குறுகிய அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்ளவும் இலங்கை மீது இவ்வாறு நடவடிக்கை எடுக்கின்றனர்.

தருஸ்மன் என்பவர் ஐ.நா பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர். குறித்த அமைப்பானது தனக்கு ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டதாக பான் கீ மூன் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கு எதிராக 4000 சாட்சியங்களைப் பெற்றுக்கொண்டதாகவும் 2300 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் சாட்சியங்களை இரகசியமாக பாதுகாப்பதாகவும் அது 2031ஆம் ஆண்டுவரை அமுலில் இருக்கும் என்றும் தாருஸ்மன் தெரிவித்திருக்கின்றார்.

ஆகவே இந்த விடயத்தை குறுகிய அரசியல் இலாபத்தை விட்டு நாடாளுமன்றத்திலுள்ள கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் நாட்டின் படையினர் உட்பட நேரடியாக தாக்கம் செய்யும் நிலைமை என்பதால் ஓரணியில் திரண்டு நடவடிக்கை எடுப்போம் என்று வலியுறுத்துகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...