Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

இந்த ஆண்டில் மாகாணசபை தேர்தலை நடத்துவது சந்தேகம்! உதய கம்மன்பில

T

The Leader Desk

மார்ச் 29, 2021 • 11:13 AM

இந்த ஆண்டில் மாகாணசபை தேர்தலை நடத்துவது சந்தேகம்!  உதய கம்மன்பில

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எவ்வாறு இருப்பினும் கொவிட் -19 நெருக்கடி நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் நிதி நெருக்கடிகள் காரணமாக இந்த ஆண்டில் தேர்தலை நடத்துவதில் சந்தேகம் உள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
  • அத்துடன் நாட்டில் இன்னமும் கொவிட் -19 வைரஸ் நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை.
  • அதற்கும் அரசாங்கம் தற்போது தயாரில்லை.
எழுத்து அளவு:

எவ்வாறு இருப்பினும் கொவிட் -19 நெருக்கடி நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் நிதி நெருக்கடிகள் காரணமாக இந்த ஆண்டில் தேர்தலை நடத்துவதில் சந்தேகம் உள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தலை நடத்த அரசாங்கம் ஆராய்ந்து வருகின்ற நிலையில், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உரிய தரப்பினருக்கு அண்மையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையிலும், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான ஜெனிவா பிரேரணையின் போது இலங்கை தொடர்பில் இந்தியா முன்வைத்துள்ள காரணிகள் குறித்தும் அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் ஒன்று எடுக்கப்பட் வுள்ளது.

குறிப்பாக மாகணசபை தேர்தல் நடத்தப்படும் என்றால் விகிதாசார முறைமையில் நடத்துவதா அல்லது தொகுதிவாரி முறைப்படி தேர்தலை நடத்துவதா என்ற சிக்கல் நிலையொன்று நிலவுகின்ற நிலையில் அது குறித்தும், ஒரே நேரத்தில் சகல மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதா அல்லது பகுதி பகுதியாக தேர்தலை நடத்துவதா என்ற காரணிகளையும் அமைச்சரவை கூட்டத்தில் ஆராயவுள்ளதாக ஆளும் தரப்பினர் மூலமாக அறிந்துகொள்ள முடிகின்றது.

இந்நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்தும் அரசாங்கத்தின் ஏற்பாடுகள் குறித்து அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் உதய கம்மன்பிலவிடம் வினவியபோது அவர் கூறியதானது, பாராளுமன்றத்தில் இது குறித்த தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்ட திருத்தங்கள் செய்துகொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் நாட்டில் இன்னமும் கொவிட் -19 வைரஸ் நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. அதேபோல் தேர்தலை நடத்துவதாயின் அதிகளவில் பணம் ஒதுக்க வேண்டும். அதற்கும் அரசாங்கம் தற்போது தயாரில்லை. எனவே இவ்வாறான நெருக்கடிகளில் உடனடியாக மாகாணசபை தேர்தலை நடத்துவது சாத்தியமானதா என சிந்திக்க வேண்டியுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மாகணசபை தேர்தல் முறையாக நடத்தப்பட்டிருக்குமாயின் இப்போது நெருக்கடியை சந்திக்க நேர்ந்திருக்காது. ஆனால் ஜனநாயகம் என கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் அவர்களின் ஆட்சியில் மக்களின் வாக்குரிமையை பரிந்துள்ளனர். எவ்வாறு இருப்பினும் இந்த ஆண்டில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புகள் இல்லை, அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் தேர்தலை நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாவும் அவர் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...