Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

லசந்தவிற்கு நடந்ததுபோல் சந்திரிக்காவுக்கும் நடக்க இடமளிக்க கூடாது! குமார வெல்கம

T

The Leader Desk

மார்ச் 28, 2021 • 4:47 PM

லசந்தவிற்கு நடந்ததுபோல் சந்திரிக்காவுக்கும் நடக்க இடமளிக்க கூடாது! குமார வெல்கம

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கம் அவரின் வாழ்க்கைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்."முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பலவீனமாக உள்ளது.
  • இருப்பினும், 9 வாரங்கள் கடந்த நிலையிலும் பொலிசார் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.
  • விசாரணையில் முடிவுகள் எதுவும் இல்லை என்று பொலிஸ் மா அதிபரை சந்தித்து தெரிவித்துள்ளனர் பொலிஸ் மா அதிபர் பொலிஸில் பல பொலிஸ் அதிகாரிகளை அழைத்துபேசியுள்ளார் ஆனால் இது வரைக்கும் பதில் கிடைக்கவில்லை இதில் ஒரு ஆபத்தான விடயம் உள்ளது.
  • அவர் கடந்த 10 ம் திகதி முறைப்பாடொன்றை பதிவுசெய்ய பொலிஸ் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சிற்கும் சென்றுள்ளார்.இந்த நாட்டிற்கு நானும் தலைமைத்துவம் வழங்கியுள்ள படியால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதை உணர்கின்றேன்.
எழுத்து அளவு:

அரசாங்கம் அவரின் வாழ்க்கைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்."முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பலவீனமாக உள்ளது. அவரின் வீட்டிற்கு அடிக்கடி சந்தேகத்திற்கிடமான நபர்கள் சென்று வருவதாக அறியக்கிடைக்கின்றது. இதற்கான விசாரணை ஒழுங்காக மேற்கொள்ளப்படவில்லை என்று குமார வெல்கம நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் வீட்டிற்குள் ஜனவரி 21, 2021 இனம்தெரியோதோர் நுழைந்துள்ளனர்.ஆனால் அவர்கள் வீட்டிலுள்ள எந்த விதமான மதிப்புமிக்க பொருட்களையும்  எடுத்துச் செல்ல வில்லை வெறு​மனே வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார்கள்.

தங்கள் கடமைகளை செய்வதாக கூறி பொலிஸார் கைரேகை அடையாளத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

இருப்பினும், 9 வாரங்கள் கடந்த நிலையிலும் பொலிசார் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.

விசாரணையில் முடிவுகள் எதுவும் இல்லை என்று பொலிஸ் மா அதிபரை சந்தித்து தெரிவித்துள்ளனர்

பொலிஸ் மா அதிபர் பொலிஸில் பல பொலிஸ் அதிகாரிகளை அழைத்துபேசியுள்ளார் ஆனால் இது வரைக்கும் பதில் கிடைக்கவில்லை

இதில் ஒரு ஆபத்தான விடயம் உள்ளது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து நடந்த தவறுகளை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளனர்.

அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் அவர்களின் பார்வையில் எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இல்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, முன்னாள் ஜனாதிபதி அச்சுறுத்தப்படுவதை நாம் காண்கிறோம்.

அவர் கடந்த 10 ம் திகதி முறைப்பாடொன்றை பதிவுசெய்ய பொலிஸ் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சிற்கும் சென்றுள்ளார்.இந்த நாட்டிற்கு நானும்  தலைமைத்துவம் வழங்கியுள்ள படியால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதை உணர்கின்றேன். ஆகவே இதற்கான விரிவான விசாரணை ஒன்று தேவை என்பதை அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...