Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

இராணுவமயமாக்கலுக்கு எதிராக அணிதிரண்ட தென்பகுதி அமைப்புகள்!

T

The Leader Desk

மார்ச் 28, 2021 • 2:54 AM

இராணுவமயமாக்கலுக்கு எதிராக அணிதிரண்ட  தென்பகுதி அமைப்புகள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த நடைமுறை நாட்டு மக்களுக்கு மிகவும் சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக சட்டத்தரணியும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான அச்சலா செனவிரத்ன எச்சரித்துள்ளார்.
  • கோட்டை ரயில் நிலையம் முன்பாக, கடந்த மார்ச் 25ஆம் திகதி, வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த போராட்டடத்தை, மக்கள் சக்தி அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
  • ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், மக்களுக்கு எதிராக அல்ல, நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராகவே, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

இந்த நடைமுறை நாட்டு மக்களுக்கு மிகவும் சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக  சட்டத்தரணியும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான அச்சலா செனவிரத்ன எச்சரித்துள்ளார்.

விசாரணையின்றி தடுப்புக்காவலைப் பயன்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு போதுமான எதிர்ப்புகள் நாட்டில் வெளிப்படுத்தப்படுவதில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

”பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் கொண்டுவரப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு தொடர்பில் நாங்கள் யாரும் அதில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் அந்த வர்த்தமானி அறிவிப்பை  பாருங்கள் அந்த அறிவிப்பின் மூலம் ஒரு வருடத்திற்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் ஒருவரை வைத்திருக்க வாய்ப்பு உள்ளது.

இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது. மக்கள் இதைப் பற்றி பேசுவதில்லை.

ஊடகங்கள் இதைப் பற்றி பேசவில்லை. இனவெறி அல்லது மதத்தைப் பற்றி பேசுவதாக சந்தேகத்தின் பேரில் யாரையும் நாளை கைது செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. "

”இராணுவ மயமாக்காதீர்கள், மக்களின் எதிர்பார்ப்புகளை அழிக்க வேண்டாம்,

இலங்கையின் வெளிநாட்டு தொழிலாளர்களை துன்புறுத்த வேண்டாம், இனக்குழுக்களுக்கு பாகுபாடு காட்ட வேண்டாம், சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தாதீர்கள்.” என சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, "இலங்கை தேசத்தின் நீதி, நேர்மைக்காக மக்களின் போராட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

கோட்டை ரயில் நிலையம் முன்பாக, கடந்த மார்ச் 25ஆம் திகதி, வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த போராட்டடத்தை, மக்கள் சக்தி அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நாடு பெண்களுக்கும் பாதுகாப்பற்ற இடமாக மாறி வருவதாக சட்டத்தரணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், மக்களுக்கு எதிராக அல்ல, நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிராகவே, தீர்மானம்  நிறைவேற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

"இந்த ஆட்சியாளர்களின் நடவடிக்கைளால் நாட்டு மக்களின் உரிமைகள், பிரஜைகளின் மனித உரிமைகள் அனைத்தும் மீறப்பட்டன.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட வர்க்கம் தற்போது பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, மக்கள் சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் சுதேஷ் நந்திமல் வலியுறுத்தினார்.

"எதிர்காலத்தில் இந்த நாட்டு மக்களுக்கு வாழ்வதற்கான உரிமை கூட கிடைக்குமா என்பது குறித்து எங்களுக்கு சந்தேகம் காணப்படுகின்றது." என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வன வளங்களை அழிப்பதன் மூலமும், விலங்குகள் கூட வாழ முடியாத சூழலை உருவாக்குவதன் மூலமும் பழங்குடி மக்களின் முழு வாழ்க்கை முறையையும் மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுதேஷ் நந்திமல் சில்வா மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் வாழும் பல்வேறு இனத்தவர்களுக்கு தமது கலாச்சாரத்தை பாதுகாக்க முடியவில்லை என சுட்டிக்காட்டியுள்ள சுதேஷ் நந்திமல், அரசாங்கம் மக்களின் கலாச்சாரத்தை மாற்றியமைக்க முயற்சிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனவாதம் மற்றும் மதவாதத்தின் ஊடாக  அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாக குற்றம் சாட்டிய அவர்,  வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்,  பிறப்பிடம் அந்த மக்களின் தாயகம் என வலியுறுத்தினார்.

”ஒருவர் இந்த நாட்டில் பிறந்திருந்தால், அவர் ஒரு தமிழரா? ஒரு முஸ்லீமா? அல்லது சிங்களவரா? என்பது முக்கியமல்ல. இந்த நாடு அவரது தாய் நாடாக இருக்க வேண்டும். அவர் இந்த நாட்டில் பிறந்திருந்தால், அவரது தாய்நாடு இந்த நாடு” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்காலத்தில் சிங்கள, தமிழ்,முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைத்து குரல் எழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சுதேஷ் நந்திமல் சில்வா இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...