Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

இந்தியாவும் - வங்காள தேசமும் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்து!

T

The Leader Desk

மார்ச் 27, 2021 • 5:26 PM

 இந்தியாவும் - வங்காள தேசமும் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்து!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வங்காளதேசத்தின் சுதந்திர பொன் விழாவில் (50-வது ஆண்டு) சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
  • அந்த அழைப்பினை ஏற்று, பிரதமர் நரேந்திரமோடி 2 நாள் பயணமாக நேற்று வங்காளதேசம் சென்றார்.
  • அதன்பின் 1971-ம் ஆண்டு நடந்த வங்காளதேச சுதந்திரப்போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள போர் வீரர்கள் நினைவுச்சின்னத்துக்கு சென்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
  • அதன்பின் பேசிய அவர், கொரோனா பெருந்தொற்றுப் பாதிப்பில் இருந்து மனிதகுலத்தை விடுவிக்கும்படி காளியிடம் வேண்டிக் கொண்டதாகத் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

வங்காளதேசத்தின் சுதந்திர பொன் விழாவில் (50-வது ஆண்டு) சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பினை ஏற்று, பிரதமர் நரேந்திரமோடி 2 நாள் பயணமாக நேற்று வங்காளதேசம் சென்றார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரதமர் மோடி கடந்த ஓராண்டு காலமாக வெளிநாடு சுற்றுப்பயணம் எதையும் மேற்கொள்ளவில்லை. எனவே கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் பயணமாக வங்காளதேச சுற்றுப்பயணம் அமைந்தது.

பிரதமர் மோடி தனி விமானத்தில் நேற்று வங்காளதேச தலைநகர் டாக்கா விமான நிலையத்தில் சென்று இறங்கினார். அங்கு அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா நேரில் வந்து பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பின் 1971-ம் ஆண்டு நடந்த வங்காளதேச சுதந்திரப்போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள போர் வீரர்கள் நினைவுச்சின்னத்துக்கு சென்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். மேலும், அவர் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இந்நிலையில், சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான இன்று அந்நாட்டின் ஹூல்னா மாகாணம் சட்ஹூரா மாவட்டம் ஈஸ்வரிப்பூர் பகுதியில் உள்ள ஜேஷோரிஸ்வரி காளி கோவிலுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவர் காளி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.

அதன்பின் பேசிய அவர், கொரோனா பெருந்தொற்றுப் பாதிப்பில் இருந்து மனிதகுலத்தை விடுவிக்கும்படி காளியிடம் வேண்டிக் கொண்டதாகத் தெரிவித்தார்.

துங்கிப்பாரா என்னுமிடத்தில் உள்ள ஷேக் முஜிபுர் ரகுமானின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அந்த வளாகத்தில் மரக்கன்றையும் நட்டார். அப்போது அவருடன் பிரதமர் ஷேக் ஹசீனா உடனிருந்தார்.

அதன்பின், ஒரஹண்டி மாகாணத்தின் கோபால்ஹன்ஞ்ச் பகுதியில் மதுவா சமூக மக்களிடம் உரையாற்றினார்.

 ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயத்தை பிரதமர் மோடிக்கு வங்காளதேச  பிரதமர் ஷேக் ஹசீனா வழங்கினார். வங்காள தேச சுதந்திரத்தின் 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட வெள்ளி நாணயத்தையும் அவர் வழங்கினார்.

12 லடசம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவின் பரிசின் அடையாளமாக பிரதமர் நரேந்திர மோடிவங்காள தேச  பிரதமர் ஷேக் ஹசீனாவிடம்  ஒப்படைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்காளதேச  பிரதமர் ஷேக் ஹசீனா இன்று டாக்காவிற்கும் புதிய ஜல்பைகுரிக்கும் இடையில் 'மிட்டாலி எக்ஸ்பிரசை தொடங்கி வைத்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி வங்காளதேச  அதிபர் அப்துல் ஹமீதை டாக்காவில் சந்தித்து பேசினார்.

இந்தியா- வங்காள தேச உறவை மேலும் மேம்படுத்த இந்தியாவும் வங்காள தேசமும்  ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...