Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தர் யாராக இருக்கலாம்?

T

The Leader Desk

மார்ச் 27, 2021 • 5:03 PM

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தர் யாராக இருக்கலாம்?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜுனைதீன், பேராசிரியர் பாத்திமா ஹன்ஸியா அப்துல் ரவூப், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அஸ்லம் உள்ளிட்ட ஐவரையும் புள்ளிகள் அடிப்படையில் தெரிவு செய்திருந்தனர்.
  • அப்துர் ரவூப், பொறியியல் பீடத்தின் இயந்திரவியல் பேராசிரியர் ஏ.எம்.
  • நாஜீமின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 7 ஆம் திகதி நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

புதிய உபவேந்தரை தெரிவு செய்வதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவினர், குறித்த 11 பேரில் இருந்து இதே பல்கலைக்கழகத்தின் கலை, கலாசாரம் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எம்.றஸ்மி, பொறியியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன், பேராசிரியர் பாத்திமா ஹன்ஸியா அப்துல் ரவூப், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அஸ்லம் உள்ளிட்ட ஐவரையும் புள்ளிகள் அடிப்படையில் தெரிவு செய்திருந்தனர்.

இதேவேளை இன்று மாலை கூடிய பேரவை, தெரிவுக்குழுவினால் பிரேரிக்கப்பட்ட ஐவரில் இருந்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட முன்னாள் பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எம்.றஸ்மி, பொறியியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன், கலை, கலாசாரம் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் ஆகிய மூவரை உபவேந்தர் நியமனத்துக்காக ஜனாதிபதிக்கு சிபார்சு செய்துள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவதாக உபவேந்தர் கதிரையில் அமர முன்னாள் உபவேந்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், இதே பல்கலைக்கழகத்தின் கலை, கலாசாரம் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் பாத்திமா ஹன்ஸியா அப்துல் ரவூப், பேராசிரியர் ஏ.எல். அப்துர் ரவூப், பொறியியல் பீடத்தின் இயந்திரவியல் பேராசிரியர் ஏ.எம். முஸாதீக், முகாமைத்துவ பீடத்திலிருந்து பேராசிரியர் எம்.பீ.எம். இஸ்மாயில் போன்றோருடன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அஸ்லம், கொழும்பு பல்கலைக்கழக நிதிப் போராசிரியர் ஏ.ஏ.அஸீஸ், மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன், பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.எம்.றஸ்மி அத்துடன் மலேசியாவிலுள்ள மலாயா பல்கலைக்கத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இஸ்மத் றம்ஸி ஆகியோரும் விண்ணப்பிருந்தனர். அதேவேளை பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீமின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 7 ஆம் திகதி நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...