Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

பி.சி.ஆர் சோதனை தனியார்மயமாக்கும் திட்டம் அம்பலம்!

T

The Leader Desk

மார்ச் 26, 2021 • 1:47 AM

பி.சி.ஆர் சோதனை தனியார்மயமாக்கும் திட்டம் அம்பலம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ”விமான நிலைய ஆய்வகத்திற்கு வரும் பணம் அறவிடும் அனைத்து பரிசோதனைகளும் ஒரு தனியார் வைத்தியசாலைக்குச் செல்கின்றன." என நேற்றைய தினம் (23) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
  • ”ஒரு வெளிநாட்டு ஆய்வகத்தை அமைத்து, அதற்காக சுமார் 35 டொலர்களை செலுத்த முயற்சிக்கின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • இலங்கையில் தினமும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு 80 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக சுகாதார அமைச்சர் அண்மையில் வெளியிட்ட அறிக்கை முற்றிலும் பொய்யானது என ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.
  • அரச ஆய்வகங்களில் நடத்தப்படும் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 2,500-3,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதால், பி.சி.ஆர் சோதனைகளுக்கு பத்து மில்லியன் ரூபாயைக் கூட செலவிட எந்த காரணமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

”விமான நிலைய ஆய்வகத்திற்கு வரும் பணம் அறவிடும் அனைத்து பரிசோதனைகளும் ஒரு தனியார் வைத்தியசாலைக்குச் செல்கின்றன."  என நேற்றைய தினம் (23) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சிலர் விமான நிலையத்தில் உள்ள ஆய்வகத்தை மூடிவிட்டு அங்கு பிற வணிக ஆய்வகங்களை அமைக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

”ஒரு வெளிநாட்டு ஆய்வகத்தை அமைத்து, அதற்காக சுமார்  35 டொலர்களை செலுத்த முயற்சிக்கின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தினமும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு 80 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக சுகாதார அமைச்சர் அண்மையில் வெளியிட்ட அறிக்கை முற்றிலும் பொய்யானது என  ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஆய்வகங்களில் நடத்தப்படும் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 2,500-3,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதால், பி.சி.ஆர் சோதனைகளுக்கு பத்து மில்லியன் ரூபாயைக் கூட செலவிட எந்த காரணமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படுமாயின், சுமார் 10 மில்லியன் ரூபாயை சம்பாதிக்க முடியும் என தொழில்முறை வைத்தியர் வலியுறுத்துகிறார்.

"விமான நிலைய ஆய்வகத்தில் இன்று 100 மில்லியன் மதிப்புள்ள உபகரணங்கள் வெறுமனே கிடக்கின்றன. இதைப் பயன்படுத்த முடியாது. அதை பொருத்தவும் முடியாது. அது குறித்து சுகாதார அமைச்சு எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை.”

3,000 முதல் 4,000 வரையான விமான பயணிகளின், பி.சி.ஆர் பரிசோதனைகள் தனியார் ஆய்வகத்தில் தினமும் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள ரவி குமுதேஷ் ஒரு சோதனைக்கு ஐம்பது டொலர்கள் வரை  செலவாகும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஆய்வக சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்பை தவறவிட்டு, அந்த பணத்தை தனியார் துறைக்கு வழங்குவது நகைப்புக்குரியது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பி.சி.ஆர் சோதனை தனியார்மயமாக்கும் திட்டம் அம்பலம்! | Tamil Leader | We Lead the Nation