Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

தீர்மானம் ஏமாற்றம் தந்தாலும் சர்வதேசத்தின் தீர்மானங்கள் பயனுள்ளவை! மாவை

T

The Leader Desk

மார்ச் 25, 2021 • 3:42 PM

தீர்மானம் ஏமாற்றம் தந்தாலும் சர்வதேசத்தின் தீர்மானங்கள் பயனுள்ளவை! மாவை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளிர் தினம் நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
  • அது மட்டுமன்றி சர்வதேசத்தின் பார்வையில் நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானங்கள் எமக்கு பயன்படக்கூடியதாகவே இருக்கும்.
  • அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ஐ.
எழுத்து அளவு:

இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளிர் தினம் நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

ஐ. நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் இலங்கை அரசாங்கம் தொடர்பிலான அறிக்கையானது மிகவும் காத்திரமானதாக இருந்தது. ஆனால் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எமக்கு ஏமாற்றம் தந்தாலும் அதனை நடைமுறைப்படுத்தவேண்டிய பொறுப்புக்கள் பல ஐ. நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளருக்கே வழங்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி சர்வதேசத்தின் பார்வையில் நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானங்கள் எமக்கு பயன்படக்கூடியதாகவே இருக்கும். அது மட்டுமன்றி ஆதரவாக செயற்பட்ட நாடுகளும் நடுநிலைமை வகித்த நாடுகளும் குறிப்பாக இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு கூடிய பங்களிப்பை செய்வார்கள் என்றே நாங்கள் நம்புகின்றோம்.

மேலும் மகளிர் தினத்தை நாங்கள் கொண்டாடும் போது தமிழ் மக்களுக்காக போராடி உயிர் நீர்த்த எமது பெண்களை நினைக்காது இருக்கமுடியாது. அவர்களுடைய தியாகம் போற்றப்படக்கூடியது. இன்று உலகத்தில் அதிகமாக பெண்களே அதிக பங்களிப்புக்களை செய்து வருகின்றார்கள். நாசா முதல் அரச நிர்வாகம் அரசியலில் சமூக மாற்றத்தில் பெண்கள் பங்களிப்பு போற்றக்கூடியது எமது இனத்தின் விடுதலைக்காக மனித உரிமை மீறல்களுக்காக இன்றுவரையில் ஐ.நா.மனித உரிமை பேரவையிலும் அதற்கு வெளியிலும் பல பெண்கள் தம்மை அர்ப்பணித்து செயற்பட்டு வருகின்றார்கள்.

இதேவேளை நாங்களும் எமது கட்சிக்குள் இளையவர்களை பெண்களை உள்வாங்குவதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம் அவர்களையும் அடுத்துவருகின்ற காலப்பகுதியில் மக்கள் பிரதிநிதிகளாக மாற்றுகின்ற செயற்பாடுகளுக்கு நாங்கள் முன்னுரிமைப்படுத்துவோம் என்பதையும் இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...