Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வளங்களை சுரண்டுவதற்கு துணைபோகாது அதனை எதிர்க்க வேண்டும்! சாணக்கியன்

T

The Leader Desk

மார்ச் 25, 2021 • 5:36 AM

தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வளங்களை சுரண்டுவதற்கு துணைபோகாது  அதனை எதிர்க்க வேண்டும்! சாணக்கியன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
  • உதாரணமாக தொல்பொருள் திணைக்களத்தினால் அன்புமுனை என்று சொல்லப்படும் ஒரு குளம் கூட கிரான் பிரதேசத்திலே இன்று வரைக்கும், அதற்கு நிதி ஒதுக்கப்பட்டும் அதனை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
  • இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர்.
எழுத்து அளவு:

நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர். தேசிய பட்டியலில் ஒருவருடன் சேர்த்து ஐவர் இருக்கின்றனர்.

உண்மையிலேயே இந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தினை கொடுக்க வேண்டும். எங்களுடைய வடக்கு, கிழக்கிலே அபிவிருத்தி பணிகளை செய்வதற்கு அவர்கள் முன்வர வேண்டும்.

எங்களுடைய பாரம்பரியமான நிலங்களை அபகரிப்பதற்கு, அதேபோன்று எங்களுடைய மதஸ்தலங்களினுடைய அபகரிப்பு செய்வதனை நிறுத்திவிட்டு உண்மையிலேயே  முழுமையான அபிவிருத்தி திட்டங்களை கொண்டுவருவதற்கு முயற்சிக்க வேண்டும்.

உதாரணமாக தொல்பொருள் திணைக்களத்தினால் அன்புமுனை என்று சொல்லப்படும் ஒரு குளம் கூட கிரான் பிரதேசத்திலே இன்று வரைக்கும், அதற்கு நிதி ஒதுக்கப்பட்டும் அதனை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

அதற்குரிய காரணம் தொல்பொருள் திணைக்களத்தினால் அந்த இடத்தினை அவர்களுக்குரிய இடமாக அடையாளப்படுத்தியுள்ளனர். இதன்காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இன்று அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் நபர்கள், இன்று நாடாளுமன்றத்தில் மட்டும் ஒரு ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் இதை கதைக்காமல், உண்மையிலேயே ஜனாதிபதியின் விசேட குழுவிற்கு இரண்டு தமிழர்களையாவது உள்வாங்க வைக்கலாம்.

இதனைப்பற்றி அறிந்த தமிழர்களையாவது உள்வாங்க வைக்கலாம். அதனை விட்டுவிட்டு அபிவிருத்தி என்ற பெயரில் எங்களுடைய நிலஅபகரிப்பினை அவர்கள் நிறுத்த வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வளங்களை சுரண்டுவதற்கு துணைபோகாது அதனை எதிர்க்க வேண்டும்! சாணக்கியன் | Tamil Leader | We Lead the Nation