Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

ஜெனீவா வாக்கெடுப்பு இலங்கைக்கு சாதகமானது என்கிறார்! ஜோன்ஸ்டன்

T

The Leader Desk

மார்ச் 25, 2021 • 5:22 AM

ஜெனீவா வாக்கெடுப்பு  இலங்கைக்கு சாதகமானது என்கிறார்! ஜோன்ஸ்டன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைச்சரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.
  • எங்களது முப்படை வீரர்கள் 2009 ல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மூன்று தசாப்த கால மிருகத்தனமான போரை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
  • மனித உரிமைகளை மதிக்கும் எந்தவொரு நாடும் கொலைகார எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளை தோற்கடிப்பதும், சிங்கள, தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பேகர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கைக்கான உரிமையை உறுதி செய்வதையும் அங்கீகரிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறினார்.
எழுத்து அளவு:

அமைச்சரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.

ஜெனீவா வாக்கெடுப்பு இலங்கைக்கு கிடைத்த வெற்றி என்று கூறிய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை சமூக ஊடகங்கள் கடுமையாக தாக்கிய போதிலும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் ஊடக பிரிவு இதுபோன்ற அறிக்கை ஒன்றை மீண்டும் வெளியிட்டுள்ளது.

"சர்வதேச சமூகத்தின் கருத்தை வென்றெடுக்க நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை இது காட்டுகிறது. அனைத்து ஆசிய நாடுகளும் எங்கள் கருத்துக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளன" என்று அவர் கூறினார்.

அமைச்சரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தத் தீர்மானம் நியாயமற்றது மற்றும் ஐ.நா. சாசனத்தின் விதிகளுக்கு எதிரானது. எங்களது முப்படை வீரர்கள் 2009 ல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மூன்று தசாப்த கால மிருகத்தனமான போரை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உலகின் மிக மிருகத்தனமான பிரிவினைவாத பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க முடிந்தது. இரண்டு உலகத் தலைவர்களை படுகொலை செய்த ஒரே பயங்கரவாத அமைப்பு புலிகள் மட்டுமே. இந்தியாவில் ராஜீவ் காந்தியைப் போலவே, இலங்கையில் ரணசிங்க பிரேமதாச​வையும் தற்கொலை குண்டுதாரிகள் படுகொலை செய்தனர்.

மனித உரிமைகளை மதிக்கும் எந்தவொரு நாடும் கொலைகார எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளை தோற்கடிப்பதும், சிங்கள, தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பேகர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கைக்கான உரிமையை உறுதி செய்வதையும் அங்கீகரிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறினார். பொதுப் பாதுகாப்பை நிறுவுவது உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிரான ஒரு ஆதாரமற்ற தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வர பல மேற்கத்திய நாடுகள் நடவடிக்கை எடுத்தன. அவர்கள் தீர்மானத்தை ஒரு அரசாங்கத்திற்கு எதிராக அல்ல, இலங்கை மக்களின் அபிலாஷைக்கு எதிராக கொண்டு வந்தார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

 நல்லாட்சியின் அரசாங்கம் அந்த நாடுகளுடன் இணைந்து நமது நாட்டிற்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. (30-01) உலகின் எந்த நாடும் தனது சொந்த நாடுகளுக்கு எதிரான மனித உரிமை தீர்மானங்களை ஆதரிக்கவில்லை.

கடந்த தேர்தலில் நாங்கள் மக்களிடம் ஆணை கேட்டோம். இந்த நாட்டிற்கு எதிரான தீர்மானங்களிலிருந்து விலகுவதற்கு ஒப்புதல் தருமாறு, அவர்கள் எங்களுக்கு ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்தார்கள். இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் பயங்கரவாதத்திற்கு எதிரான நமது மனிதாபிமான நடவடிக்கையின் இறுதி கட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

புலிகள் தோற்கடிக்கப்பட்ட நேரத்தில் பயங்கரவாதிகளைப் பாதுகாக்க முயன்ற நாடுகளே இவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் அனைத்து நாடுகளினதும் மனோநிலையை சிதைப்பதே அவர்களின் நோக்கம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜெனீவா வாக்கெடுப்பு இலங்கைக்கு சாதகமானது என்கிறார்! ஜோன்ஸ்டன் | Tamil Leader | We Lead the Nation