Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

அப்லடொக்ஸின் என்ற புற்றுநோயை ஊக்குவிக்கும் தேங்காய் எண்ணெய் விற்பனை!

T

The Leader Desk

மார்ச் 24, 2021 • 1:27 PM

அப்லடொக்ஸின் என்ற புற்றுநோயை ஊக்குவிக்கும் தேங்காய் எண்ணெய் விற்பனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நான்கு இறக்குமதியாளர்களுக்குச் சொந்தமான அப்லொடொக்ஸின் அடங்கிய 13 எண்ணெய் கொள்கலன்கள் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக அச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புத்திக சில்வா கூறியுள்ளார்.
  • இந்நாட்டின் வருடாந்த தேங்காய் எண்ணெயின் தேவை 180,000 மெட்ரிக் தொன்களாகும்.
  • அவற்றில் தேசிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களால் சுமார் 25,000 மெட்ரிக் தொன் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • எஞ்சிய 155,000 மெட்ரிக் தொன் எண்ணெய் இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்படுகிறது.
எழுத்து அளவு:

நான்கு இறக்குமதியாளர்களுக்குச் சொந்தமான அப்லொடொக்ஸின் அடங்கிய 13 எண்ணெய் கொள்கலன்கள் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக அச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புத்திக சில்வா கூறியுள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட எண்ணையின் மாதிரியை பெற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் அப்லடொக்ஸின் புற்றுநோய் ஊக்கி அடங்கியுள்ளதை சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது.

அதற்கேற்ப மேற்படி எண்ணெய் மக்கள் நுகர்விற்காக சந்தைக்கு  விநியோகிக்கப்படக் கூடாது என்பதால் அந்த கொள்கலன்களை உடனடியாக மீள் ஏற்றுமதி செய்யுமாறு இலங்கை சுங்கத் திணைக்களம் குறித்த நிறுவனத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், இது சந்தைக்கு விநியோகிக்கப்பட்டது எப்படி என்பதுதான் கேள்விக் குறியாக உள்ளது.

இந்நாட்டின் வருடாந்த தேங்காய் எண்ணெயின் தேவை 180,000 மெட்ரிக் தொன்களாகும். அவற்றில் தேசிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களால் சுமார் 25,000 மெட்ரிக் தொன் உற்பத்தி செய்யப்படுகிறது. எஞ்சிய 155,000 மெட்ரிக் தொன் எண்ணெய் இறக்குமதியாளர்களினால் இறக்குமதி செய்யப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அப்லடொக்ஸின் என்ற புற்றுநோயை ஊக்குவிக்கும் தேங்காய் எண்ணெய் விற்பனை! | Tamil Leader | We Lead the Nation