Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்!

T

The Leader Desk

மார்ச் 22, 2021 • 10:10 AM

நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழ் படங்களான ரேனிகுண்டா, நீர்ப்பறவை, தென் மேற்கு பருவக்காற்று, பில்லா - 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன்.
  • அவரது நிலையை அறிந்து, திரைப்பட பாடலாசிரியர் சினேகன், நடிகர் விஷால், ஸ்ரீமன், பூச்சி முருகன் உள்ளிட்டோர் உதவி செய்தனர்.
  • கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
எழுத்து அளவு:

தமிழ் படங்களான ரேனிகுண்டா, நீர்ப்பறவை, தென் மேற்கு பருவக்காற்று, பில்லா - 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், மூத்த மருத்துவர்கள் வரும் முன்பே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு பின்னர் அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது உயிர் பிரிந்த தகவலை, பிரபல திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன்.அன்புநிறை

தமிழ் படங்கள் சிலவற்றில் நடித்திருந்தபோதும், தீப்பெட்டி கணேசனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வறுமை நிலையில் இருந்த அவரது வாழ்க்கை, கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்க கட்டுப்பாடுகள் நிலவிய காலத்தில் மேலும் மோசம் அடைந்தது.

இதனால் தனக்குத் தெரிந்த புரோட்டா மாஸ்டர் தொழிலில் ஈடுபட்டு வந்தார் கணேசன். சிறு, சிறு தொழில்களில் கவனம் செலுத்தி வந்தார். அவரது நிலையை அறிந்து, திரைப்பட பாடலாசிரியர் சினேகன், நடிகர் விஷால், ஸ்ரீமன், பூச்சி முருகன் உள்ளிட்டோர் உதவி செய்தனர்.

தீப்பெட்டி கணேசன்

தீப்பெட்டி கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்

நடிகர் விஷால் சார்பில் அவரது குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை சாமான் சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

தீப்பெட்டி கணேசனின் நிஜ பெயர் கார்த்திக். அந்த பெயரைச் சொல்லி தன்னை அழைத்தவர் நடிகர் அஜித் மட்டுமே என ஷூட்டிங்கில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை ஒரு பேட்டியில் தீப்பெட்டி கணேசன் பகிர்ந்து கொண்டிருந்தார்.

தன் மீது பாசமாக உள்ள அஜித்தை நேரில் பார்த்து அவரிடம் உதவி கேட்க பல முறை முயன்றும் அது நடக்கவில்லை என வேறொரு பேட்டியில் தீப்பெட்டி கணேசன் கூறியிருந்தார்.

இதற்கிடையே, சமீபத்தில் தீப்பெட்டி கணேசனை தொடர்பு கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், அவரது குழந்தைகளின் ஒரு வருட படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாக கூறியிருந்தார். இந்த நிலையில், தீப்பெட்டி கணேசனின் இறப்புச் செய்தி, அவரது குடும்பத்தினரையும் திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மறைந்த தீப்பெட்டி கணேசனுக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...