Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

பசறையில் விபத்துக்குள்ளான பேரூந்தில் பயணித்த பயணி ஒருவர் அந்த பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனரை பற்றி இப்படிச் சொல்கிறார்!

T

The Leader Desk

மார்ச் 22, 2021 • 4:50 AM

பசறையில் விபத்துக்குள்ளான பேரூந்தில்  பயணித்த பயணி ஒருவர் அந்த பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனரை பற்றி இப்படிச் சொல்கிறார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விபத்துக்குள்ளான குறித்த பேரூந்தில் கடந்த வாரம் பண்டாரவளை நகரத்தில் பயணித்த சுப்புன் நலிந்த என்பவர் தனது அனுபவத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
  • “கடந்த வாரம் திங்கட்கிழமை காலை 9.20 மணியளவில் பண்டாரவளை நகரில் நான் இதே பேருந்தில் ஏறினேன்.
  • நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருகின்றேன்.
  • இரத்தினரபுரியில் இருந்து கொட்டாவை வருவதற்கு 5 மணித்தியாலங்கள் எடுத்துக் கொண்டார்” என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

விபத்துக்குள்ளான குறித்த பேரூந்தில் கடந்த வாரம் பண்டாரவளை நகரத்தில்  பயணித்த சுப்புன் நலிந்த என்பவர் தனது அனுபவத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

“கடந்த வாரம் திங்கட்கிழமை காலை 9.20 மணியளவில் பண்டாரவளை நகரில் நான் இதே பேருந்தில் ஏறினேன். ஹப்புத்தளை பகுதியில் இதேபோன்ற வளைவு ஒன்றில் பேருந்து திரும்பியது.

அப்போதும் பள்ளத்தில் விழுவதற்கு நொடி பொழுதில் பேருந்து தப்பியது. பின்னர் பம்பஹின்ன சந்தியில் முன்னால் சென்ற வானை முந்தி செல்ல இந்த பேருந்து சாரதி முயற்சித்தார்.

இதனால் எதிரில் வந்த மற்றுமொரு பேருந்தில் இந்த பேருந்து மோதப் பார்த்தது. அப்போதும் அதிஷ்டவசமாக பேருந்து பாரிய விபத்தில் இருந்து தப்பியது.

இதன் போது பேருந்தில் இருந்த பெண் ஒருவர் கோபமடைந்து ஏன் இவ்வாறு வாகனம் ஓட்டுவது என நடத்துனரிடம் கேட்டார்.

நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருகின்றேன். வேண்டும் என்றால் இறங்கி வேறு ஒரு பேருந்தில் செல்லுங்கள் என குறித்த பெண்ணிடம் நடத்துனர் கூறினார்.

அதன் பின்னர் பலங்கொட பிரதேசத்தில் வைத்து மற்றுமொரு பேருந்துடன் போட்டி போட்டு பேருந்தை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாகவிருந்த நிலையில் மக்கள் சாரதியை கடுமையாக திட்ட ஆரம்பித்தனர்.

அத்துடன் பேருந்தின் உரிமையாளரின் தொலைபேசி இலக்கம் பேருந்திற்குள் எழுதப்பட்டிருந்தது. அதனை தொடர்பு கொண்ட மக்கள், சாரதிகளை உரிய முறையில் வாகனம் ஓட்டுமாறு கூறுங்கள் என கூறியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த சாரதி பேருந்தை மிகவும் மெதுவாக ஓட்டி சென்றார். இரத்தினரபுரியில் இருந்து கொட்டாவை வருவதற்கு 5 மணித்தியாலங்கள் எடுத்துக் கொண்டார்” என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் அதே பேருந்து 20ம் திகதி பசறை 13ஆம் மைல் கல்லில் வைத்து 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...