Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

மட்டக்களப்பில் மண்கொள்ளையை பார்வையிடச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களை வழிமறித்து அச்சுறுத்தல்!

T

The Leader Desk

மார்ச் 21, 2021 • 1:38 PM

மட்டக்களப்பில் மண்கொள்ளையை பார்வையிடச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களை வழிமறித்து அச்சுறுத்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடிப்பிரதேசத்தின் மேற்கே இடம்பெற்றுள்ளது.
  • இது தொடர்பாக (19)வெள்ளிக்கிழமை நடைபெற்ற செங்கலடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டது.
  • அப்பிரதேசத்தைச்சுற்றிப்பார்வையிடச்சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை மேலும் செல்ல விடாமல் தமது டிப்பர் இரண்டினால் வழியை மறித்து சிலர் அட்டகாசம் செய்துள்ளதாகத் தெரிகிறது.
  • இதேவேளை இறுதியாக நேற்று முன்தினம் (19) செங்கலடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் இப்பிரதேசத்தில் மண் அகழ்வது உடனடியாக தடைசெய்யப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடிப்பிரதேசத்தின் மேற்கே இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக  (19)வெள்ளிக்கிழமை நடைபெற்ற செங்கலடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

த.தே.கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் கோ.கருணாகரம்(ஜனா) ஆகியோர் அச்சுறுத்திய சம்பவத்தை சுட்டிக்காட்டி மண்கொள்ளையின் பாராதூரத்தை எடுத்துரைத்தனர்.

மாவட்ட எல்லையிலுள்ள மேய்ச்சல் காணி ஒரு பக்கம் பறி போவதும் மறுபக்கம் எல்லையில்லாமல் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் குறிப்பாக கிரான் செங்கலடி பிரதேச செயலகத்திலுள்ள மண்வளங்களை வெளிமாவட்டங்களுக்கு விற்று பணமாக்கும் மண்மாபியாக்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை பற்றி பரவலாக செய்திகள் வருகின்றன.

இப்பிரச்சினை ஒவ்வொரு பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி கூட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் கோ.கருணாகரம் (ஜனா) ஆகிேயோர் பிரஸ்தாபித்து வருகின்றனர்.

இதனைத் தடுத்து நிறுத்தும்படி பொலிஸாருக்கும் பிரதேச செயலகத்திற்கும் அறிவித்தும் வருகிறார்கள்.

நேற்று முன்தினம் செங்கலடி பதுளை வீதியில் பாலமடு அண்டிய இழுப்படிச்சேனை அண்மித்த கிராமங்களான வேப்பவெட்டுவான் ,மகிழவெட்டுவான் செல்லும் கிராமங்களை அண்டிய இடங்களில் புதிய ஆறு ஒன்று தோண்டப்படுவதாக பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன்,ஜனா ஆகியோரிடம் முறையிட்டனர்.

அதன்படி அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.மண் அகழ்ந்து அகழ்ந்து பாரிய சமுத்திரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதைக் கண்டார்கள்.

அப்பிரதேசத்தைச்சுற்றிப்பார்வையிடச்சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை மேலும் செல்ல விடாமல் தமது டிப்பர் இரண்டினால் வழியை மறித்து சிலர் அட்டகாசம் செய்துள்ளதாகத் தெரிகிறது.

பிரதேசவாசிகள் கூறுகையில்  எமது ஊரை காப்பாற்றுங்கள். எங்கோ வெளியூரிலிருந்து வந்தவன் இங்குள்ள மண் வளத்தை அள்ளி போகிறான். இனத்தை அழித்தது போதாது என்று தற்போது எங்களது மண்வளத்தை அழித்து எங்களது இருப்பை மாற்றி வருகிறார்கள்.

தினமும் நூற்றுக்கணக்கில் லொறிகளில் கொழும்பு போன்ற பிரதேசங்களுக்கு மண் கொண்டு செல்லப்படுகின்றன. இதையிட்டு அரச அதிபர் முதல் அரசியல்வாதிகள் வரை கவனம் எடுத்து எமது மண்வளத்தைப் பாதுகாக்கவேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

இதேவேளை இறுதியாக நேற்று முன்தினம் (19) செங்கலடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் இப்பிரதேசத்தில் மண் அகழ்வது உடனடியாக தடைசெய்யப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...