Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

ஒன்றரை மாத காலத்திற்குள் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு!

T

The Leader Desk

மார்ச் 20, 2021 • 10:04 AM

ஒன்றரை மாத காலத்திற்குள் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் தேடும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
எழுத்து அளவு:

குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தினை சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர் காணாமல் போனோரின் உறவினர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்குமாயின் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்தில் தீர்வினை பெற்றுத் தரமுடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்திருந்தார்

குறித்த கலந்து கொண்ட காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளில் 10 பேர் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டு அவர்கள் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு குறித்த விவரங்களை கொண்டு தீர்வு வழங்க கூடிய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இது அணிகளாக செயற்படுகின்றார்கள் ஒரு தரப்பு இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்க கூடாது எனவும் இன்னொரு தரப்பு இதற்குரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.

எதிர்வரும் ஒன்றரை மாத காலத்திற்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உரிய தீர்வினை தற்போதைய நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தோடு குறித்த கலந்துரையாடலின் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் தங்களது உறவுகள் பலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எனவும் பலருக்கு என்ன நடந்தது என தெரியாது எனவும் தெரிவித்தனர்.

எனினும் குறித்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பிரச்சினை தொடர்பில் இதை தீராத பிரச்சினையாக இதை வைத்திருக்க விரும்பவில்லை சில அரசியல் தலையீடுகள் இந்த விடயத்தை தீராத பிரச்சினையாக வைத்து அரசியல் செய்ய முனைகின்றார்கள் எனினும் நான் இதற்கு ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் முகமாகவே இன்றைய தினம் முதற்கட்டமாக உங்களை சந்தித்துள்ளேன் எதிர்வரும் காலங்களில் உங்களை ஜனாதிபதியிடம் அழைத்துச் சென்று உங்களுக்குரிய தீர்வினை பெற்றுத்தர முடியும் என எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...