Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

இலங்கையின் மத்ரஸா, புர்கா தடை விவகாரம் குறித்து தலையிடுமாறு தென்னாபிரிக்க முஸ்லிம் அமைப்புக்கள் கோரிக்கை!

T

The Leader Desk

மார்ச் 19, 2021 • 2:54 PM

இலங்கையின் மத்ரஸா, புர்கா தடை விவகாரம் குறித்து தலையிடுமாறு தென்னாபிரிக்க முஸ்லிம் அமைப்புக்கள் கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, சில முஸ்லிம் பெண்கள் அணியும் பாரம்பரிய முழு முகத்தை மூடும் ஆடையான புர்காவை தடை செய்யப் போவதாக, கடந்த வார இறுதியில் பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகர அறிவித்திருந்தார்.
  • அத்துடன் புர்கா மீதான தடை மற்றும் மத்ரஸா பாடசாலைகளை மூடுவது என்பது இலங்கையின் பெரும்பான்மையினத்தவரை திருப்திப்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது என்றும் தென்னாபிரிக்க உலமா சபை குற்றம் சுமத்தியுள்ளது.
  • இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவின் ஐக்கிய உலமா சபை, அந்த நாட்டின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் நலேடி பாண்டரிடம் இந்த விஷயத்தில் தலையிடுமாறு கோரியுள்ளது.
எழுத்து அளவு:

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, சில முஸ்லிம் பெண்கள் அணியும் பாரம்பரிய முழு முகத்தை மூடும் ஆடையான புர்காவை தடை செய்யப் போவதாக, கடந்த வார இறுதியில் பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகர அறிவித்திருந்தார்.

 
இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவின் ஐக்கிய உலமா சபை, அந்த நாட்டின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் நலேடி பாண்டரிடம் இந்த விஷயத்தில் தலையிடுமாறு கோரியுள்ளது.
 
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள், பிரதான மற்றும் சமூக ஊடகங்களில் கடுமையான வெறுப்புணர்வின் இலக்காக மாறிவிட்டனர்.
 
அத்துடன் புர்கா மீதான தடை மற்றும் மத்ரஸா பாடசாலைகளை மூடுவது என்பது இலங்கையின் பெரும்பான்மையினத்தவரை திருப்திப்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது என்றும் தென்னாபிரிக்க உலமா சபை குற்றம் சுமத்தியுள்ளது.
 
இதேவேளை, இலங்கையில் பிற மதக் குழுக்களும் தங்கள் மத போதனைகளை கற்பிக்கும் நிறுவனங்களைக் கொண்டுள்ளன. எனினும் அவற்றைக் குறிவைக்கும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று சாம்நெட் அமைப்பின் தலைவர் கலாநிதி பைசல் சுலைமான் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே முஸ்லிம்களின் விருப்பத்துக்கு எதிராக கொவிட் உடலங்களை தகனம் செய்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்ட போதும் தென்னாபிரிக்காவின் ஐக்கிய மக்கள் உலமா சபை இது போன்று தலையீட்டுக்கு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...