Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

இலங்கையில் மோசமடையும் மனித உரிமைகள் நிலைமைகள் - டெபோரா ரோஸ்!

T

The Leader Desk

மார்ச் 19, 2021 • 2:34 PM

இலங்கையில் மோசமடையும் மனித உரிமைகள் நிலைமைகள்  - டெபோரா ரோஸ்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்ரனி பிளிங்கனுக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
  • கோட்டாபய ராஜபக்ஷ புதிய ஜனாதிபதியாகத் தெரிந்தெடுக்கப்பட்டவுடன், தற்போதைய அரசாங்கம் இந்தத் தீர்மானத்திலிருந்து விலகியது.
  • இம் மாதம் 22ஆம் திகதி ஐ.நா.
எழுத்து அளவு:

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்ரனி பிளிங்கனுக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையை சர்வதேச பொறுப்புக்கூறலுக்கு நகர்த்துவதற்கு ஏனைய நாடுகளுடன் இராஜதந்திர நடவடிக்கையில் இறங்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையுடனான இராஜதந்திர நகர்வுகளில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை மையப்படுத்தவும், இலங்கைக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் செயன்முறையை மேம்படுத்துவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்யவும் அமெரிக்காவை வலியுறுத்துகிறார்.

2015ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை முன்வைத்த தீர்மானத்தை வரைவு செய்வதிலும் ஏற்றுக்கொள்வதிலும் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது.

கோட்டாபய ராஜபக்ஷ புதிய ஜனாதிபதியாகத் தெரிந்தெடுக்கப்பட்டவுடன், தற்போதைய அரசாங்கம் இந்தத் தீர்மானத்திலிருந்து விலகியது.

இது உறுதியான முன்னேற்றத்தின் தோல்வி மட்டுமல்லாமல், உள்நாட்டுப் பொறுப்புக்கூறலுக்கான அரசியல் விருப்பமின்மை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது என டெபோரா ரோஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம் மாதம் 22ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்புக்கு வரவுள்ள நிலையில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இலங்கை சம்பந்தமாக ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றார், அதில் நாட்டின் உள்ளக அரசியல் விவகாரம் தொடர்பில் அதிகளவில் குறிப்பிடப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே குறிப்பிட்டு அதனை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...