Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

ஹாபிஸ் நஸீரின் வாய்க்கு பூட்டு போட ஹக்கீம் முன்வர வேண்டும்!

T

The Leader Desk

மார்ச் 19, 2021 • 11:03 AM

ஹாபிஸ் நஸீரின் வாய்க்கு பூட்டு போட ஹக்கீம் முன்வர வேண்டும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த முஸ்லிம் சமூகத்தை மீண்டும் ஒருதரம் பாதாளத்தில் தள்ளி விடுமோ என்ற ஐயம் குடிகொண்டுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான பீ.எம்.
  • இலங்கையில் கொரோனா ஜனாஸாக்களை அடக்குவதற்கு கேட்டுப்போராடிய எந்த ஜனநாயக போராட்டத்திலும் 20 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் எம்.பீ க்கள் கலந்து கொண்டதை கண்ணாரக்காண முடிந்திருக்கவில்லை.
  • இவ்வாறு உச்சாப்பில் சமூகத்தின் எதிர்கால நலன்களில் கருத்தின்றி செயற்பட்டு அறிக்கைவிடும் அரசியல்வாதிகளை அவர் சார்ந்த கட்சியோ, கட்சித் தலைமையோ, முஸ்லிம் சிவில் சமூகங்களோ கட்டுப்படுத்துவதற்கு இயலாத நிலையில் உள்ளது எமது சமூகத்தின் சாபக்கேடாகும்.
எழுத்து அளவு:

இந்த முஸ்லிம் சமூகத்தை மீண்டும் ஒருதரம் பாதாளத்தில் தள்ளி விடுமோ என்ற ஐயம் குடிகொண்டுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான பீ.எம். ஷிபான் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீரின் சமீபத்தைய அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து வெளியிட்ட அவர், சர்வதேசத்தின் இறுகிய பிடிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கையில் கொரோனாவினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அடக்கும் விவகாரம் முடிவுக்கு வந்தது . இலங்கையில் கொரோனா  ஜனாஸாக்களை அடக்குவதற்கு கேட்டுப்போராடிய எந்த ஜனநாயக போராட்டத்திலும் 20 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் எம்.பீ க்கள் கலந்து கொண்டதை கண்ணாரக்காண முடிந்திருக்கவில்லை. ஆனால் மறைமுகமாக அவர்களுடைய பங்களிப்பு இருப்பதனை மறுக்க முடியாமலும் இல்லை.

இருப்பினும் ஹாபிஸ் நசீர் போன்றவர்கள் ஜனாஸா அடக்க அனுமதி கிடைத்த நாளிலிருந்து  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஊடகங்களில் தன்னாலேயே அவை முடிந்ததாக எண்ணி தமது செய்திகளை பதிவேற்றி வந்தனர். அதன் இறுதி அங்கமாக "முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கவில்லை வெறும் ஜனாஸா பெட்டிகள் மாத்திரமே எரிந்தன" என்ற சர்ச்சைக்குரிய அறிக்கையை ஹாபிஸ் நசீர் வெளியிட்டு இருப்பதானது இந்த முஸ்லிம் சமூகத்தை மீண்டும் ஒருதரம் பாதாளத்தில் தள்ளி விடுமோ என்ற ஐயம் குடிகொண்டுள்ளது.

பௌத்த தேரர்கள் இவ்வாறான அறிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து ஒட்டுமொத்த சிங்கள சமூகத்தையும், "ஹாபீஸ் நசீர் குறிப்பிடும் இந்த அறிக்கையானது உண்மையாயின்  நாட்டு சட்டத்திற்கு ஒருபோதும் எவரும் கட்டுப்படக் கூடாது " என்று அழுத்தி கூறியிருக்கிறார்கள். இவ்வாறு உச்சாப்பில் சமூகத்தின் எதிர்கால நலன்களில் கருத்தின்றி செயற்பட்டு அறிக்கைவிடும் அரசியல்வாதிகளை அவர் சார்ந்த  கட்சியோ, கட்சித் தலைமையோ, முஸ்லிம் சிவில் சமூகங்களோ கட்டுப்படுத்துவதற்கு இயலாத நிலையில் உள்ளது எமது சமூகத்தின் சாபக்கேடாகும்.

இருப்பினும் கட்சி தலைவர் றவூப் ஹக்கீம் "ஹாபிஸ் நசீர் அவர்களின் கருத்து முட்டாள் தனமானது" என்று கூறியுள்ளார். அவர் அத்துடன் தனது கடமை முடிந்தது என்று இருக்காமல், தனது கட்சி உறுப்பினரின் வாய்க்கு பூட்டு போடும் வேலையை விரைவாக செய்ய வேண்டியது காலத்தின் தேவையாக மாறியுள்ளது.

ஹாபிஸ் நசீர் அவர்கள் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுவது தனது முயற்சியால் தான் என்பதை முஸ்லிம் சமூகம் ஏற்கும் வரை இன்னும் என்னென்ன சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைக்கப்போகின்றாரோ? என்ற அச்சம் சமூகத்தில் எழ ஆரம்பித்துள்ளது.  குற்றபுலனாய்வுக்கு சென்ற தேரர்கள் நாளை என்ன சதி செய்வார்கள் என்று யாராலும் ஊகிக்க முடியாதுள்ளது. அது ஜனாஸா அடக்கம் செய்வதில் பாதிப்பை ஏற்படுத்துமானால், முழு முஸ்லிம் சமூகத்தையுமே பாதிக்கும். ஆகவேதான் ஹாபிஸ் நசீர் என்ற மரங்கொத்தி வாழை மரத்தில் கொத்தி கொண்டது மாத்திரமன்றி, முழு சமூகத்தையுமே வாழை மரத்தில் கொத்த வைத்த கதையாக மாற்றிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

 

நூருல் ஹுதா உமர்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...