Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

கடத்தல்கள் "மீண்டும் ஆரம்பம்" எதிர்க்கட்சிகள் அச்சத்தில்!

T

The Leader Desk

மார்ச் 16, 2021 • 4:23 PM

கடத்தல்கள் "மீண்டும் ஆரம்பம்"  எதிர்க்கட்சிகள் அச்சத்தில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • க்கு முந்தைய யுகத்தை நினைவுபடுத்தும் வகையில் ஊடகவியலாளர் ஒருவர் 10ஆம் திகதி கடத்தப்பட்டு தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
  • அதிகாரிகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக குற்றவாளிகள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் முன்னாள் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • கறுப்பு நிற வாகனத்தில் இணையதள ஊடகவியலாளரான சுஜீவ கமகே என்பவர் கடத்தப்பட்டு, அவரது செய்தி மூலங்கள் மற்றும் அரசியல் தொடர்புகள் பற்றிய தகவல்களை தெரிவிக்கும்படி, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

2015க்கு முந்தைய யுகத்தை நினைவுபடுத்தும் வகையில் ஊடகவியலாளர் ஒருவர் 10ஆம் திகதி கடத்தப்பட்டு தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கறுப்பு நிற வாகனத்தில் இணையதள ஊடகவியலாளரான சுஜீவ கமகே என்பவர் கடத்தப்பட்டு, அவரது செய்தி மூலங்கள் மற்றும் அரசியல் தொடர்புகள் பற்றிய தகவல்களை தெரிவிக்கும்படி, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், கடத்தல்களை "மீண்டும்" தொடங்க ஏதேனும் திட்டம் உள்ளதா என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

சுஜீவ கமகேவிடம், அவரது செய்தி மூலங்கள் மற்றும் அரசியல் தொடர்புகள் பற்றிய தகவல்களை தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவருக்காக குரல் எழுப்புவதில் ஊடகவியலாளர்கள் மத்தியில் ஐக்கியம் காணப்படாமை கவலையளிப்பதாக,  முன்னாள் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக குற்றவாளிகள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் முன்னாள் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடத்தப்பட்ட ஊடகவியலாளர்  பிஹல்பொல வீதி, உடவலவத்தையில்  வசிப்பவர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

கடத்தப்பட்ட பின்னர், அவரை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்று, கொடூரமாக சித்திரவதை செய்து அடித்து, அவரது கை மற்றும் மார்பு பிரதேசங்கள் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தரவுகளை சேமித்து வைக்கும் இரண்டு பென் டிரைவ்கள் உட்பட அவர் வசம் காணப்பட்ட அனைத்து உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட ஊடகவியலாளர் சிகிச்சையின் பின்னர் தேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...