Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

புர்கா தடை ஏப்ரல் மாதத்திற்குள் செயற்படுத்தப்படும்! அரசாங்கம்

T

The Leader Desk

மார்ச் 16, 2021 • 5:55 AM

புர்கா தடை ஏப்ரல் மாதத்திற்குள் செயற்படுத்தப்படும்! அரசாங்கம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது குறித்து இந்த விடயத்துடன் தொடர்புடைய தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட ஆலோசனை வழங்கியுள்ளார் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
  • அவர் மேலும் குறிப்பிடுகையில்,“ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் சிறந்த பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அடிப்படைவாதிகளின் பின்னணி கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் 2019ஆம் ஆண்டு ஏப்ரல்21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்காது.
  • அறிக்கையின் யோசனைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்குள் செயற்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

அதன்படி, மத்ரஸா பாடசாலை மற்றும் புர்கா தடை, அடிப்படைவாதத்துக்கு எதிரான புதிய சட்டங்கள் உருவாக்கல், விசாரணை அறிக்கைகளை நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்ற கட்டமைப்பில் விசேட பொறிமுறையை ஏற்படுத்தல், அடிப்படைவாத செயற்பாடுகளை கண்காணிக்க அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் விசேட பிரிவை நிறுவல் ஆகிய விடயங்கள் குறித்து துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இந்த விடயத்துடன் தொடர்புடைய தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட ஆலோசனை வழங்கியுள்ளார் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,“ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் சிறந்த பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இஸ்லாமிய அடிப்படைவாதம் நாட்டில் எதிர்காலத்தில் தலைத்தூக்காத அளவிற்கு பல விடயங்களை செயற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.

ஆணைக்குழுவின் அறிக்கையின் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பரிந்துரைகளை வெகுவிரைவில் செயற்படுத்துமாறு ஜனாதிபதி தொடர்புப்பட்ட தரப்பினருக்கும், நிறுவனங்களுக்கும் விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அடிப்படைவாதிகளின் பின்னணி கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் 2019ஆம் ஆண்டு ஏப்ரல்21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்காது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சுயாதீனமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க மக்கள் நியாயம் கோரி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கறுப்பு ஞாயிறு தின போராட்டத்தில் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது.

குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்களை பாதுகாக்கவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.

அறிக்கையின் யோசனைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்குள் செயற்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...