Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

அரசியல்வாதிகளின் உதவியுடன் ரஜரட்ட காடு கொள்ளையடிக்கப்படுகிறது!

T

The Leader Desk

மார்ச் 15, 2021 • 4:18 AM

அரசியல்வாதிகளின் உதவியுடன் ரஜரட்ட காடு கொள்ளையடிக்கப்படுகிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரஜரட்டயில் இது நடப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
  • பலுகஸ்வெவவில் உள்ள கட்டுகெலியாவ வனத்தை அழித்து, மிஹிந்தலை பிரதேச செயலக பிரிவில் 580 வெல்லராகம கிராம நிலதாரி பிரிவில் பெரிய அளவிலான மண் அகழ்வு மோசடி நடைபெற்று வருவதாக நில மற்றும் விவசாய சீர்திருத்த இயக்கத்தின் சுற்றுச்சூழல் ஆர்வலர் சஜீவ சாமிகர சுட்டிக்காட்டுகிறார்.
  • சஜீவ சாமிகர 100 ஏக்கர் காடுகளை பெக்கோ இயந்திரங்களை பயன்படுத்தி முற்றிலுமாக அழித்து, 50 அடி ஆழத்தில் குழிகளை தோண்டி மண் கொள்ளையிடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் குற்றம் சாட்டியுள்ளார்.
  • "மிஹிந்தலை பிரதேச செயலாளர் இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறார்." பலுகஸ்வேவ, கட்டுகெலிய, தம்மென்னாவ மற்றும் கருவலகஸ்வெவ கிராமங்கள் அரச வனப்பகுதியைச் சுற்றி அமைந்துள்ளன.
எழுத்து அளவு:

ரஜரட்டயில் இது நடப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பலுகஸ்வெவவில் உள்ள கட்டுகெலியாவ வனத்தை அழித்து, மிஹிந்தலை பிரதேச செயலக பிரிவில் 580 வெல்லராகம கிராம நிலதாரி பிரிவில் பெரிய அளவிலான மண் அகழ்வு மோசடி நடைபெற்று வருவதாக நில மற்றும் விவசாய சீர்திருத்த இயக்கத்தின் சுற்றுச்சூழல் ஆர்வலர் சஜீவ சாமிகர சுட்டிக்காட்டுகிறார்.

சஜீவ சாமிகர

100 ஏக்கர் காடுகளை பெக்கோ இயந்திரங்களை பயன்படுத்தி முற்றிலுமாக அழித்து, 50 அடி ஆழத்தில் குழிகளை தோண்டி மண் கொள்ளையிடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சர் ஒருவரின் மனைவி, அமைச்சரின் முக்கிய ஆதரவாளர் மற்றும் மிஹிந்தலை பிரதேச சபை அபிவிருத்தி உத்தயோகத்தர் ஆகியோர் இதை மேற் கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார.Sajeewa chamikara

மண் அகழ்வுக்கு அனுமதி பெறுவதற்கு வேறு நபர்களின் பெயர்களை பயன்படுத்தி மேற்கண்ட நபர்கள் அனைவரும் மண் அகழ்வு மோசடியில் ஈடுபட்டு வருவதாக சஜீவ சாமிகர மேலும் தெரிவித்தார்.

"மிஹிந்தலை பிரதேச செயலாளர் இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறார்."

பலுகஸ்வேவ, கட்டுகெலிய, தம்மென்னாவ மற்றும் கருவலகஸ்வெவ கிராமங்கள் அரச வனப்பகுதியைச் சுற்றி அமைந்துள்ளன.

இந்த கிராமங்களில் சுமார் 600 விவசாய குடும்பங்கள் வாழ்கின்றன, அவற்றின் முக்கிய வருமானம் விவசாயம் மற்றும் சேனைப்பயிர்ச்செய்கையாகும்.

பெரும்கேத்தில் நெல் பயிரிடப்படுவதுடன் சிறுபோகத்தில் மிளகாய், கத்தரி மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.

விவசாயத்திற்கு  தேவையான நீர் பலுகஸ்வேவ - கட்டுகெலியாவ அரச வனப்பகுதிலிருந்து கிடைக்கின்றன.

உலர்ந்த மற்றும் ஈரலிப்பான வனப்பகுதியுடன் இந்த காட்டில் இருந்து தொடங்கும் நீரோடைகள் பலுகஸ் குளம், கட்டுகெலியாவ குளம், கம்மன்னவா குளம், எலத்தங்குலம குளம் மற்றும் கருவாலகஸ் குளம் ஆகியவற்றுக்கு நீரை சேமிக்க உதவுகின்றன

மேலும், இந்த வனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் பயிர்களுக்கு தேவையான தண்ணீரை பெற கிணறுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த கிணறுகளுக்கான நீர் ஊற்று கட்டுகெலியாவ பலுகஸ்வெவவில் உள்ள அரசாங்க காட்டிலிருந்து கிடைப்பதாக விவசாய சீர்திருத்த இயக்கம் கூறுகிறது.​

Palugaswewa2

Palugaswewa3

Palugaswewa

 

Palugaswewa1

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அரசியல்வாதிகளின் உதவியுடன் ரஜரட்ட காடு கொள்ளையடிக்கப்படுகிறது! | Tamil Leader | We Lead the Nation