Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடல்!

T

The Leader Desk

மார்ச் 14, 2021 • 5:21 PM

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த சந்திப்பு வெலி ஓயா அஹெட்டுவெவ பிரிவேனாவில் இடம்பெற்றது.
  • பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு புதுக்குடியிருப்பு பெண் தொழில் முயற்சியாளர் கூட்டுறவு சங்கத்தில் இன்று (மார்ச் 14) முற்பகல் இடம்பெற்றது.
  • புதுக்குடியிருப்பு இளைஞர் கழகங்களின் சம்மேளனம், உடையார்கட்டு மூங்கிலாறில் அமைந்துள்ள சம்மேளன மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த Y2K இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப் பட்டறையில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டார்.
எழுத்து அளவு:

இந்த சந்திப்பு வெலி ஓயா அஹெட்டுவெவ பிரிவேனாவில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின்போது வெலிஓயா பிரதேசத்தின் தற்போதை நிலைமைகள், மக்கள் முகம்கொடுக்கும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்த கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள்,  தர்மத்தின் ஊடாக சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கான நீதியினை நிலை நாட்டுவதே தனது முதன்மையாக குறிக்கோளாக காணப்படுவதாக இதன்போது தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு புதுக்குடியிருப்பு பெண் தொழில் முயற்சியாளர் கூட்டுறவு சங்கத்தில் இன்று (மார்ச் 14) முற்பகல் இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட அரசியல் தலைவராக கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள்,  முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டதன் பின்னர் இப்பகுதிக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்திருந்தது.

யுத்தத்தினால் அதிகளவு பாதிப்புக்கு உட்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு காணப்படுவதோடு அதிகளவு பெண்தலைமைத்துவ குடும்பங்கள் உள்ள மாவட்டமாகவும் காணப்படுகின்றமையால் இம்மாவட்டத்தின் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழனென்ற ரீதியில் தமக்கு இருப்பதாகவும் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பு இளைஞர் கழகங்களின் சம்மேளனம், உடையார்கட்டு மூங்கிலாறில் அமைந்துள்ள சம்மேளன மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த Y2K இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப் பட்டறையில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டார்.

சமூகத்தை வாழிகாட்டும் நாளைய தலைவர்களாக மாறவுள்ள Y2K இளையோர்களுக்கு இவ்வாறானதொரு தலைமைத்துவப் பயிற்சி அவசியம் தொடர்பில் குறிப்பிட்ட கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள், இவ் இளையோர் தம்மத்தியில்  காணப்படும் பலங்கள்,  பலவீனங்கள், வாய்ப்புக்கள் தொடர்பில் அறிந்துகொண்டு அதற்கேற்ற முறையில் எவ்வாறு முன்னகரலாம் என்பது தொடர்பிலும் இதன்போது தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தாம் தற்போது முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.  

சுயதொழிலில் ஈடுபட்டு தமது பொருளாதாரதை முன்னெடுத்துவரும் பெண்களை பலப்படுத்துவதன் ஊடாகவே உண்மையான தேசிய பொருளாதாரத்தை இலங்கையில் கட்டியெழுப்ப முடியுமென்றும் வன்னி மாவட்டத்தில் அதனை செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

IMG-20210314-WA0007.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடல்! | Tamil Leader | We Lead the Nation