Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

மகப்பேறு விடுமுறை குறைப்பிற்கு எதிராக முறைப்பாடு!

T

The Leader Desk

மார்ச் 14, 2021 • 2:51 PM

மகப்பேறு விடுமுறை குறைப்பிற்கு எதிராக முறைப்பாடு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒன்றிணைந்த அபிவிருத்தி ஊழியர் நிலையம், தொழிற்சங்கங்கள் மற்றும் பெண்கள் அமைப்பு இணைந்து நேற்றைய தினம் (12) இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளன.
  • மகப்பேறு விடுமுறை குறைக்கப்படுவதற்கு எதிராக கடந்த வருடம் செப்டம்பர் 7ஆம் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்றைய தினம் விசாரணை மேற்கொண்டது.
  • அரச சேவையில் உள்ள தாய்மார்கள் இதுவரை அனுபவித்த 12 வார மகப்பேறு விடுமுறையை, இந்த வருடம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு ஆறு வாரங்கள் மாத்திரமே வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
  • பெண்களுக்கான 84 நாட்கள் மகப்பேறு விடுமுறையை, 42 நாட்களாகக் குறைப்பது பிறக்காத குழந்தைகளின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

ஒன்றிணைந்த அபிவிருத்தி ஊழியர் நிலையம், தொழிற்சங்கங்கள் மற்றும் பெண்கள் அமைப்பு இணைந்து நேற்றைய தினம் (12) இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளன.

மகப்பேறு விடுமுறை குறைக்கப்படுவதற்கு எதிராக கடந்த வருடம் செப்டம்பர் 7ஆம்  செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்றைய தினம் விசாரணை மேற்கொண்டது.

இதன்போது, பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆலோக பண்டார கலந்து கொண்டார்.

அரச சேவையில் உள்ள தாய்மார்கள் இதுவரை அனுபவித்த 12 வார மகப்பேறு விடுமுறையை, இந்த வருடம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு ஆறு வாரங்கள் மாத்திரமே வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பெண்களுக்கான 84 நாட்கள் மகப்பேறு விடுமுறையை, 42 நாட்களாகக் குறைப்பது பிறக்காத குழந்தைகளின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் 2ஆம் திகதி, பயிற்சி பட்டதாரிகளாக பொது சேவையில் சேர்க்கப்பட்ட பெரும்பான்மையான பட்டதாரிகளின் மகப்பேறு விடுமுறையை அரசாங்கம் பாதியாக குறைத்துள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி ஊழியர் நிலையத்தின், செயலாளர் தம்மிக முனசிங்க சுட்டிக்காட்டினார்.

Dammika 2021.03.12தற்போதைய அரசாங்கம் ஸ்தாபனக் குறியீட்டிற்கு வெளியே சென்று மகப்பேறு விடுமுறையை பாதியாக குறைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்தாபனக் குறியீட்டின் 18ஆவது பிரிவின் கீழ் நிரந்தர, தற்காலிக, சாதாரண மற்றும் பயிற்சி ஊழியர்களுக்கு, 84 வேலை நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் மகப்பேறு விடுமுறையை குறைப்பதானது, பொது வேலைவாய்ப்புக்கான வழிகாட்டியாக அமைந்துள்ள, ஸ்தாபனக் குறியீட்டை மீறும் செயல் என தொழிற்சங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...