Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவிற்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு!

T

The Leader Desk

மார்ச் 12, 2021 • 2:00 AM

அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவிற்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனவரி 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய, 2015 ஜனவரி 08 முதல் 2019 நவம்பர் 16 வரையிலான காலகட்டத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டது.
  • இலஞ்ச சட்டத்தின் 70 ஆவது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை அவர்கள் செய்துள்ளதால், இது தொடர்பாக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பத்து உச்ச நீதிமன்ற சட்டத்தரணிகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • வர்த்தமானி அறிவிப்பின் முதல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய, அரச அதிகாரிகள், பொது நிறுவனங்களின் ஊழியர்கள், ஆயுதப்படை உறுப்பினர்கள் மற்றும் இலங்கை பொலிஸ் உறுப்பினர்கள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நபர்களை மாத்திரமே விசாரணை செய்ய ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

பத்து சட்டத்தரணிகளை உள்ளடக்கிய குழு, மார்ச் 9ஆம் திகதி ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழு அதன் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டு செயற்பட்டுள்ளதால், அரசாங்கத்தின் பெருந்தொகை நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

2020 ஜனவரி 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட  அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக,  வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய, 2015 ஜனவரி 08 முதல் 2019 நவம்பர் 16 வரையிலான காலகட்டத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால்  விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

வர்த்தமானி அறிவிப்பின் முதல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய, அரச அதிகாரிகள், பொது நிறுவனங்களின் ஊழியர்கள், ஆயுதப்படை உறுப்பினர்கள் மற்றும் இலங்கை பொலிஸ் உறுப்பினர்கள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நபர்களை மாத்திரமே விசாரணை செய்ய ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் இவ்வாறு காணப்படுகின்ற போதிலும், வர்த்தமானி அறிவிப்பில் சேர்க்கப்படாத துறைகளைச் சேர்ந்தவர்கள் குறித்தும் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியுள்ளதாக,

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் சட்டத்தரணிகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இது அரசாங்க நிதியை தவறாக பயன்படுத்திய விடயம் என சட்டத்தரணிகள் வாதிடுகின்றனர்.

"தமக்கு விசாரணை செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட துறைகளில் உள்ளவர்கள் குறித்தும் விசாரணைகளை மேற்கொண்டமையால், அரசாங்கத்தின் பெருந்தொகை  நிதி வீணடிக்கப்பட்டு முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.”

அரசியல் பழிவாங்கல் குறித்த விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, அதன் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு செயற்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு, சட்டத்தரணிகள் குழு 22 எடுத்துக்காட்டுகளை சமர்ப்பித்துள்ளது.

அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழு கிட்டத்தட்ட ஒரு வருடமாக செயற்பட்டு வருகிறது, அதன் பராமரிப்பு மற்றும் பிற செயற்பாடுகளுக்கு அரசாங்கம் பெருந் தொகையை செலவிட்டுள்ளது.

"இந்த பணம் மக்களின் பணம் என்பதால், அந்த வர்த்தமானி அறிவிப்பில் உள்ள அதிகாரங்களுக்கு அப்பால் செல்வது பொது நிதியை வீணடிப்பதாகும்.”

அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணக்குழுவின் தலைவராக  ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்னவின் செயற்பட்டதோடு, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சந்திர ஜயதிலக்க மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் உறுப்பினர்களாக செயற்பட்டனர்.

இலஞ்ச சட்டத்தின் 70 ஆவது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை அவர்கள் செய்துள்ளதால், இது தொடர்பாக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பத்து உச்ச நீதிமன்ற சட்டத்தரணிகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டத்தரணிகளான, சேனக பெரேரா, சைனுல் லுதுப்,  மஞ்சுள ஸ்ரீ சந்திரசேன, அச்சலா செனவிரத்ன, தம்பையா ஜெயரட்னராஜா, ஹேமந்த விக்ரமசிங்க, நாமல் ராஜபக்ச,  உபாலி ரத்நாயக்க, அசோக விஜேவர்தன மற்றும் சுலா அதிகாரி ஆகியோர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...