Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

நூற்றுக்கணக்கான பெண்கள் இலங்கையில் கடன் காரணமாக இறக்கின்றனர்!

T

The Leader Desk

மார்ச் 11, 2021 • 9:39 AM

நூற்றுக்கணக்கான பெண்கள் இலங்கையில் கடன் காரணமாக இறக்கின்றனர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடன் நெருக்கடியால் நாட்டில் நூற்றுக்கணக்கான பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்த அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
  • நமது நாட்டை பொறுத்தவரை, 200 க்கும் மேற்பட்ட இலங்கை பெண்கள் கடன் சுமையை தாங்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
  • அதிக வட்டி விகிதங்கள் காரணமாக கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத 2.4 மில்லியனுக்கும் அதிகமான இலங்கை பெண்கள் நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் வசூலிப்பவர்களின் அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உடல் மற்றும் மன துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்த குழு சுட்டிக்காட்டுகிறது.
  • இலாப நோக்கற்ற நுண்நிதி சேவைகளுக்கு பதிலாக சிறு உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய கூட்டுறவு போன்ற வழிமுறைகளை நிறுவுவதற்கு அரசாங்கம் வசதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
எழுத்து அளவு:

கடன் நெருக்கடியால் நாட்டில் நூற்றுக்கணக்கான பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்த அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

நுண்கடன் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டாளர் ரேணுகா கருணாரத்ன செய்தியாளர்களிடம் கருத்துதெரிவிக்கையில், ஹிங்குரெகொடாவில் உள்ள ராயல் நினைவுச்சின்னத்தின் முன் தொடங்கிய உண்ணாவிரதத்தைகேட்டறிவதற்கு எந்த அதிகாரிகளும் வரவில்லை எனவும் நுண்நிதிக்கடன்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

நமது நாட்டை பொறுத்தவரை, 200 க்கும் மேற்பட்ட இலங்கை பெண்கள் கடன் சுமையை தாங்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அதிக வட்டி விகிதங்கள் காரணமாக கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத 2.4 மில்லியனுக்கும் அதிகமான இலங்கை பெண்கள் நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் வசூலிப்பவர்களின் அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உடல் மற்றும் மன துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்த குழு சுட்டிக்காட்டுகிறது.

"பல பெண்கள் இப்போது கடன் வலையில் சிக்கி, நுண்கடன்களுக்கு மேலதிகமாக கடன் வாங்குகிறார்கள். தற்போதுள்ள வீடு கூட அடமானம் வைக்கப்பட்டு, நுண்கடன்களை திருப்பிச் செலுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்று நுண்கடன்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

200 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் வருமானம் தொடர்பான குடும்ப தகராறில் வீட்டு வன்முறையின் விளைவாக தற்கொலை செய்து கொண்டதாக அந்த குழு கூறுகிறது.

நுண்கடன் நிறுவனங்கள் பெண்கள் தங்கள் அரசியல் அபிலாஷைகளுக்காக நுன் கடன் நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து ஏமாற்றி வருவதாகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை கொள்ளையடிப்பதாகவும் குற்றம்ம் சாட்டப்பட்டுள்ளது.

Microfinance loans llanka 1

Microfinance loans llanka

அரசாங்கம் பொறுப்பைத் தவிர்க்கிறது:

நுண் நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணம், அரசாங்கம் அடிமட்ட பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து விலகுவதோடு, வறுமை ஒழிப்பும், அந்த பொறுப்பை இலாப நோக்குடைய நிதித்துறைக்கு மாற்றுவதும் ஆகும்.

உடனடியாக தலையிட்டு இந்த கடன்களில் இருந்து பெண்களை அவர்களின் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுவிக்குமாறு அவர்கள் அரசாங்கத்தை கேட்டுள்ளார்கள்

நிதித் துறையை ஒழுங்குபடுத்துவதற்கும் நிதி நுகர்வோரைப் பாதுகாப்பதற்கும் சட்டமியற்ற வேண்டும் என்றும் அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர்.

இலாப நோக்கற்ற நுண்நிதி சேவைகளுக்கு பதிலாக சிறு உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய கூட்டுறவு போன்ற வழிமுறைகளை நிறுவுவதற்கு அரசாங்கம் வசதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

"நுண்கடனால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஐந்து முக்கிய கோரிக்கைகள் இதோ! 

01. அனைத்து நுண்நிதி கடன்களையும் ரத்துசெய்!

02. கொள்ளையடிக்கும் நுண் நிதியங்கள் தணிக்கை செய்யப்படும் வரை உடனடியாக அனைத்து கடன்களையும் வசூலிப்பதை நிறுத்துங்கள்!

03. நுண் நிதிக் கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் நிறுத்துங்கள்!

04. நுண் கடன் நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்களை கடன் பட்டியலிலிருந்து உடனடியாக நீக்கவும்!

05. பாகுபாடற்ற சமூக விடுதலையை மையமாகக் கொண்ட பெண்கள் நிதி அமைப்பை நிறுவுங்கள்!

நுண்கடன் நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட மகளிர் கூட்டுத் தலைவரான பிரியந்திகா குமாரி செய்தியாளர்களிடம் தங்களது கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் வரை போராட்டத்தை விட மாட்டாம் என்று கூறியுள்ளார்.

"அரசாங்கம் எங்களது கோரிக்​கைளை ஏற்று உரிய தீர்வை பெற்றுத் தறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் பங்கு பற்றிய்பெண்கள் தெரிவித்துள்ளனர்.

(புகைப்படம் ஏ.விமுக்தி டி சில்வா)

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...