Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

எங்களுக்கு சர்வதேசத்தின் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்!

T

The Leader Desk

மார்ச் 10, 2021 • 2:15 AM

எங்களுக்கு சர்வதேசத்தின் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அம்பாறை மாவட்டம், பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்ற சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் நேற்று மாலை கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்புப் போராட்டம் 5ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
  • பாதுகாப்புத் தரப்பினர், புலனாய்வுப் பிரிவினர் நாம் இவ்விடத்திற்கு போராட்டத்திற்காக வந்த போது எம்மை புகைப்படங்கள் எடுத்தனர்.
எழுத்து அளவு:

அம்பாறை மாவட்டம், பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்ற சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் நேற்று மாலை கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்புப் போராட்டம் 5ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

மாற்றுக் கட்சியினரின் இன்னல்கள் அவர்களது குழப்பும் செயற்பாடுகளை தந்திரோபாயமாகப் பாவிக்கின்றார்கள். இந்த இடத்திலிருந்து எம்மை எழுப்புவதற்கு துடிக்கின்றார்கள்.

அவர்களுக்கு ஒன்றினைத் தெரிவிக்க விரும்புகின்றேன். எவ்வித துயரமோ துன்பமோ இருந்தாலும் இவ்விடத்தினை விட்டுச் செல்ல மாட்டோம். எங்களுக்கு சர்வதேசத்தின் தீர்வு கிடைக்கும் வரை இவ்விடத்தில் நின்று சுழற்சி முறையில் போராடிக் கொண்டிருப்போம்.

அம்பிகை அம்மணிக்கு அம்மனின் அருள் கிடைக்க வேண்டி இவ்விடத்தில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நடாத்துவோம்.

பாதுகாப்புத் தரப்பினர், புலனாய்வுப் பிரிவினர் நாம் இவ்விடத்திற்கு போராட்டத்திற்காக வந்த போது எம்மை புகைப்படங்கள் எடுத்தனர்.

ஆனால், அவர்கள் எங்கு அனுப்புகின்றார்கள் என்று தெரியவில்லை. எமது உயிரை துச்சமென நினைத்து எவருக்கும் பயப்படாமல் இவ்விடத்தில் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். கட்சிக்கு அப்பால் தனிப்பட்ட ரீதியில் நாங்கள் போராட்டத்தை நடாத்தி கொண்டிருக்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் இப்போராட்டத்தை நடாத்துகின்றது என்ற சிந்தனை தமிழ் பேசும் மக்கள் எவருக்கும் வரக்கூடாது. ஏனெனில், கட்சிக்கு அப்பால் பெண்களாகிய நாங்கள்தான் இப்போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றோம். 

தமிழ் பேசும் ஆண்களாகிய நீங்கள் கட்டாயம் எமக்கு ஆதரவு தர வேண்டும். எங்களை ஊக்கப்படுத்தி கை கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எங்களுக்கு சர்வதேசத்தின் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்! | Tamil Leader | We Lead the Nation