Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

வட மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி சமாதான யாத்திரை அக்கரைப்பற்றை வந்தடைந்தது!

T

The Leader Desk

மார்ச் 9, 2021 • 11:55 AM

வட மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி சமாதான யாத்திரை அக்கரைப்பற்றை வந்தடைந்தது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவ்வேலைத்திட்டங்களின் ஓர் அங்கமாக, 'வட மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி' எனும் கருப்பொருளில், சமயத் தலைவர்களினது சமாதான யாத்திரை, அம்பாறை - அக்கரைப்பற்றை வந்தடைந்தது.
  • தேசிய சமாதான பேரவையின் நிகழ்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.யூ.உவைஸ் மதானி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேரவையின் ஆலோசகர் சுமாது வீரவர்ண, திட்ட உத்தியோகத்தர் எஸ்.
  • தேசிய சமாதான பேரவையின் அனுசரணையில், அட்டாளைச்சேனை சர்வமத குழு மற்றும் றுஹூனு லங்கா அமைப்பு ஆகிய இணைந்து இந்த சமாதான யாத்திரையை ஏற்பாடு செய்திருந்தன.
எழுத்து அளவு:

இவ்வேலைத்திட்டங்களின் ஓர் அங்கமாக, 'வட மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி' எனும் கருப்பொருளில், சமயத் தலைவர்களினது சமாதான யாத்திரை, அம்பாறை - அக்கரைப்பற்றை வந்தடைந்தது.

தேசிய சமாதான பேரவையின் அனுசரணையில், அட்டாளைச்சேனை சர்வமத குழு மற்றும் றுஹூனு லங்கா அமைப்பு ஆகிய இணைந்து இந்த சமாதான யாத்திரையை ஏற்பாடு செய்திருந்தன.

தேசிய சமாதான பேரவையின் நிகழ்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.யூ.உவைஸ் மதானி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேரவையின் ஆலோசகர் சுமாது வீரவர்ண, திட்ட உத்தியோகத்தர் எஸ். வத்சலா மற்றும் சர்வமதக் குழுவின் தலைவர் எஸ்.ஹாசிம், றுஹூனு லங்கா அமைப்பின் பணிப்பாளர் எஸ்.ஜவ்பர் மற்றும் சமயத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது, சமயத்தலைவர்களுக்கிடையிலான கருத்துப்பரிமாறல்கள் நடைபெற்றதுடன், இரு குழுவினர்களுக்கிடையிலான சமய, கலை, கலாசாரம், பாரம்பரியம் தொடர்பிலான அறிமுகமும் நடைபெற்றன.

மத சகவாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு மற்றும் ஏனையவர்களுடன் சகோதரத்துவத்தை பகிர்ந்து கொள்ளல் போன்றனவை மூலம் இலங்கையில், பன்மைத்துவ சமுதாயத்தை வலுவூட்டுவதுடன் தேசத்தின் அமைதிக்கும் என்றும் பாடுபடுவோமென இதன்போது வலிறுத்தப்பட்டு, இலங்கையின் மாதிரிப் படத்தில் அனைத்து இன மக்களினாலும் அமைதி, சமாதானத்தை கட்டியயெழுப்பும் வகையில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...