Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

ரஷியா மீது பொருளாதார தடைகளை விதிக்கும் அமெரிக்கா!!

T

The Leader Desk

மார்ச் 9, 2021 • 3:13 AM

ரஷியா மீது பொருளாதார தடைகளை விதிக்கும் அமெரிக்கா!!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமெரிக்க அரசு துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
  • அமெரிக்காவின் உள்துறை, பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வணிகம் போன்ற 9 அரசு துறைகள் மற்றும் மைக்ரோசொப்ட் உட்பட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.
  • அதே சமயம் ‘சோலார் விண்ட்ஸ் ஹேக்கிங்' தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின்போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் பிராட் ஸ்மித் இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷியாவின் உளவுத்துறை இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளதாக கூறினார்.
  • அடுத்த 3 வாரங்களுக்குள் ரஷியாவுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

அமெரிக்க அரசு துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் உள்துறை, பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வணிகம் போன்ற 9 அரசு துறைகள் மற்றும் மைக்ரோசொப்ட் உட்பட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சைபர் தாக்குதல் பல மாதங்களாக நடந்து கொண்டிருப்பதாகவும் இதனை தடுப்பது மிகவும் சிக்கலானது என்றும் அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு பாதுகாப்பு முகமை (சி.ஐ.எஸ்.ஏ) அப்போது கூறியது.

மேலும் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த சோலார் விண்ட்ஸ் என்கின்ற ஐ.டி. நிறுவனத்தின், நெட்வொர்க் மேனேஜ்மெண்ட் மென்பொருளைப் பயன்படுத்திதான், சைபர் தாக்குதல் நடத்தியவர்கள், அமெரிக்காவின் முக்கிய கம்பியூட்டர்களில் நுழைந்ததாக சி.ஐ.எஸ்.ஏ.‌ கூறியது. இதனால் இந்த சம்பவம் ‘சோலார் விண்ட்ஸ் ஹேக்கிங்' என்று அழைக்கப்படுகிறது.

இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷியா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் ரஷியா அதனை மறுத்தது.

அதே சமயம் ‘சோலார் விண்ட்ஸ் ஹேக்கிங்' தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின்போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் பிராட் ஸ்மித் இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷியாவின் உளவுத்துறை இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளதாக கூறினார். ஆனால் ரஷியா இந்த குற்றச்சாட்டையும் திட்டவட்டமாக மறுத்தது.

இந்த சைபர் தாக்குதல் குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் அப்போது “எனது நிர்வாகத்தில் சைபர் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். முதலில் சைபர் தாக்குதல்களை நடத்தும் எதிரிகளை நாம் தடுக்க வேண்டும். நம் கூட்டாளிகள் மற்றும் நம் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, இதுபோன்ற தீங்கிழைக்கும் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் மீது கணிசமான அபராதங்களை விதிப்பதன் மூலம் அதைச் செய்வோம்” என கூறியிருந்தார்.

இந்த நிலையில் ‘சோலார் விண்ட்ஸ் ஹேக்கிங்' விவகாரத்தில் ரஷியா மீது வலுவான பொருளாதார தடைகளை விதிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‌

தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்த தகவலின் பேரில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் சைபர் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷியா மீது பொருளாதார தடைகள் உள்ளிட்ட மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க ஜோ பைடன் நிர்வாகம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 வாரங்களுக்குள் ரஷியாவுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...