Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கைது செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளரை உடனே விடுவிக்க ஆர்.எஸ்.எஃப் வலியுறுத்தல்!

T

The Leader Desk

ஜனவரி 14, 2021 • 2:49 PM

 கைது செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளரை உடனே விடுவிக்க ஆர்.எஸ்.எஃப் வலியுறுத்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மட்டக்களப்பைச் சேர்ந்த முருகுபிள்ளை கோகுலதாசன் ஒடுக்குமுறையான அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது மிகத் தெளிவாக ஊடகச் சுதந்திரத்தை முடக்கும் செயலாகும் என்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அதன் ஆசிய-பசிபிக் பகுதிக்கான தலைவர் டானியல் பஸ்டார்ட் கூறியுள்ளார்.
  • மாவீரர் தினத்துக்கு அடுத்த நாள் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓராண்டுக்கு முன்னர் இலங்கையின் கிழக்கைச் சேர்ந்த ஏழு ஊடகவியலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டிருந்தது.
  • ஃபேஸ் புக் பதிவு ஒன்றில் விடுதலைப் புலிகளின் படங்களை பதிவு செய்ததாகக் கூறி கோகுலதாசன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
எழுத்து அளவு:

மட்டக்களப்பைச் சேர்ந்த முருகுபிள்ளை கோகுலதாசன் ஒடுக்குமுறையான அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது மிகத் தெளிவாக ஊடகச் சுதந்திரத்தை முடக்கும் செயலாகும் என்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அதன் ஆசிய-பசிபிக் பகுதிக்கான தலைவர் டானியல் பஸ்டார்ட் கூறியுள்ளார்.பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 48 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென்று எல்லையில்லா ஊடகவியலாளர்கள் அமைப்பு கோரியுள்ளது.

மட்டக்களப்பைச் சேர்ந்த முருகுபிள்ளை கோகுலதாசன் ஒடுக்குமுறையான அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது மிகத் தெளிவாக ஊடகச் சுதந்திரத்தை முடக்கும் செயலாகும் என்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அதன் ஆசிய-பசிபிக் பகுதிக்கான தலைவர் டானியல் பஸ்டார்ட் கூறியுள்ளார்.

ஃபேஸ் புக் பதிவு ஒன்றில் விடுதலைப் புலிகளின் படங்களை பதிவு செய்ததாகக் கூறி கோகுலதாசன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆனால் உள்நாட்டுப் போரின் போது கொல்லப்பட்டவர்கள் தொடர்பான நிகழ்வுகளின் படங்களையே பதிவு செய்தார் என்று கூறப்படுகிறது. 

நிபந்தனையின்றி உடனடியாக அவர் விடுவிக்கப்பட வேண்டுமென்று இலங்கையின் சட்டமா அதிபரை வலியுறுத்துகிறோம், தமிழர்களின் பிரச்சனைகளுக்காக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குரல் கொடுக்கும் அனைத்து ஊடகவியலாளர்களையும் துன்புறுத்துவதை பாதுகாப்பு படையினர் அவசியம் நிறுத்த வேண்டுமென்று ஆர்.எஸ்.எஃப் அமைப்பின் அறிக்கை கூறுகிறது. 

கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளரின் நிலையை வெளிப்படுத்தி இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கான அமைப்பு ஜே.டி.எஸ் டிவீட் செய்துள்ளது. 
கோகுலதாசன் முகவும் இரகசியமான முறையில் கடந்த நவம்பர் 28ஆம் திகதி மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டார் என்று அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினத்துக்கு அடுத்த நாள் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஓராண்டுக்கு முன்னர் இலங்கையின் கிழக்கைச் சேர்ந்த ஏழு ஊடகவியலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டிருந்தது. வெளிநாட்டிலுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து பணம் பெற்றார்கள் என்று குற்றஞ்சாட்டி அந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. அப்போது வெளியான துண்டுப் பிரசுரங்களில் இவர்கள் ஏழு பேரின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்கள் வட்டமிட்டு அடையாளம் காணப்பட்டிருந்தனர். 

ஆனால் இது குறித்த முறைப்பாட்டைப் பதிவு செய்யவோ அல்லது அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவோ உள்ளூர் பொலிசார் மறுத்துவிட்டனர். 
உலகளவில் ஊடக சுதந்திரம் குறித்த 180 நாடுகளின் பட்டியலில் இலங்கை 127ஆவது இடத்திலுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...