Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

மாஸ்டர் - சினிமா விமர்சனம்!

T

The Leader Desk

ஜனவரி 13, 2021 • 2:37 PM

மாஸ்டர் - சினிமா விமர்சனம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • படத்தின் கதை இதுதான்: சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டு துன்புறுத்தப்படும் சிறுவன், வளர்ந்த பிறகு பவானி (விஜய் சேதுபதி) என்ற பெயரில் பெரிய கொலைகாரனாகிவிடுகிறான்.
  • குறிப்பாக க்ளைமேக்ஸிற்கு முந்தைய சுமார் 20 நிமிடக் காட்சிகள் அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை.
  • அதிலும், பவானியின் பாத்திரம் ரொம்பவும் பழகிப்போன வில்லன் பாத்திரம்தான் என்றாலும், அதில் விஜய் சேதுபதி நடித்திருப்பதால் சற்று தனித்துத் தெரிகிறது.
  • நாட்டின் திரையரங்குகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதித்து இயங்க அரசாங்கம் ஒப்புதல் வழங்கியிருந்தது.
எழுத்து அளவு:

படத்தின் கதை இதுதான்: சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டு துன்புறுத்தப்படும் சிறுவன், வளர்ந்த பிறகு பவானி (விஜய் சேதுபதி) என்ற பெயரில் பெரிய கொலைகாரனாகிவிடுகிறான்.

மாஸ்டர் - சினிமா விமர்சனம்

தன் தீய செயல்களுக்கு சீர்திருத்தப் பள்ளியில் இருக்கும் சிறுவர்களையே பயன்படுத்திக்கொள்கிறான். அங்கு வரும் புதிய ஆசிரியரான ஜான் துரைராஜ் (விஜய்), பவானியை வீழ்த்தி எப்படி சிறுவர்களைக் காக்கிறார் என்பதுதான் படம்.

படத்தின் துவக்கம் பவானியின் டெரரான அறிமுகத்தோடு அதிரடியாகவே துவங்குகிறது. கதாநாயகனின் அறிமுகமும் கலகலப்பாகவே இருக்கிறது. ஆனால், படம் துவங்கி ஒரு மணி நேரம் ஆன பிறகும், திரைக்கதை மையக் கதையை நோக்கிச் செல்லாமல் இழுத்துக்கொண்டே செல்வது அலுப்பூட்ட ஆரம்பிக்கிறது. பிறகு சுதாரித்துக்கொண்டு மையக் கதைக்குள் நுழைகிறது படம். 'ஆகா' என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் இடைவேளை.

இடைவேளைக்குப் பின் மெல்ல மெல்ல சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது திரைக்கதை. ஆனால், எந்த இடத்தில் க்ளைமேக்ஸ் வர வேண்டுமோ அதையும் தாண்டி படம் நீண்டு கொண்டே செல்வதுதான் சிக்கல். குறிப்பாக க்ளைமேக்ஸிற்கு முந்தைய சுமார் 20 நிமிடக் காட்சிகள் அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை. ஒரு கட்டத்தில் இதற்கு எப்போதுதான் முடிவு என எதிர்பார்க்கும்படி ஆகிவிடுகிறது.

Master

கதாநாயகனுடன் மோதல் துவங்கிய பிறகு, வில்லன் கதாநாயகனுக்கு நெருக்கமானவர்களை கொலை செய்வது, ஆத்திரமடையும் கதாநாயகன் வில்லனை வெறியோடு தேடிப்பிடித்து அடித்து நொறுக்குவதெல்லாம் பல படங்களில் பார்த்த காட்சிகள்தான்.

இந்தப் படம் சிக்கலான திரைக்கதையைக் கொண்ட ஒரு திரைப்படமல்ல. மாறாக, நல்லவன் VS கெட்டவன் என்ற வழக்கமான மோதலைக் கொண்ட ஒரு திரைப்படம். அதிலும், பவானியின் பாத்திரம் ரொம்பவும் பழகிப்போன வில்லன் பாத்திரம்தான் என்றாலும், அதில் விஜய் சேதுபதி நடித்திருப்பதால் சற்று தனித்துத் தெரிகிறது.

கல்லூரி பேராசிரியராகவும் சீர்திருத்தப்பள்ளியின் ஆசிரியராகவும் வரும் விஜய், பத்து வயது குறைந்தவரைப் போல இருக்கிறார். மிகச் சிறப்பாக நடனமாடுகிறார். எதிரிகளைத் துவம்சம் செய்கிறார். அவருடைய ஃப்ளாஷ் பேக் என்ன என்று கேட்கும்போது, ஒவ்வொருவரிடமும் ஒரு பழைய சினிமா படத்தின் கதையைச் சொல்லும்போது ரொம்பவுமே ரசிக்க வைக்கிறார். ஆனால், பாதிப் படத்திற்கு மேல் கதாநாயகன் குடித்துக்கொண்டே இருப்பது அவ்வளவு சிறப்பாக இல்லை.

படத்தின் கதாநாயகியைப் போல வரும் மாளவிகா மோகனனுக்கு சொல்லும்படி ஏதும் வேலையில்லை. ஆண்ட்ரியா, நாசர் போன்ற முக்கியமான கலைஞர்கள் சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டிவிட்டு மறைந்துவிடுகிறார்கள்.

அனிருத்தின் பின்னணி இசை அட்டகாசம். திரைக்கதையோடு சேர்ந்துவரும் சில பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன.
பெரிதாக யாராலும் கவனிக்கப்படாத சிறுவர் சீர்திருத்தப் பள்ளியை மையமாக வைத்து, ஒரு கதையைச் சொல்லியிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால், தளர்வான திரைக்கதையின் காரணமாக, சற்று ஏமாற்றமளிக்கிறது படம்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள திரையரங்கே இவ்வாறு இன்று நண்பகல் முதல் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டது.

நாட்டின் திரையரங்குகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதித்து இயங்க அரசாங்கம் ஒப்புதல் வழங்கியிருந்தது.

எனினும் யாழ்ப்பாணம் நகரில் மூடப்பட்ட திரையரங்கு முழுமையான இருக்கைகளுக்கு பார்வையாளர்களை அனுமதித்து ரிக்கெட்டுக்களை விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் ரிக்கெட்டுக்களை இணையத்தில் விற்பனை செய்ய அறிவுறுத்தியும் அதனை மீறியமை தொடர்பிலேயே குறித்த திரையரங்கு மூடப்பட்டதாக சுகாதாரத் துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மாஸ்டர் - சினிமா விமர்சனம்! | Tamil Leader | We Lead the Nation