Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

இலங்கை பொலிசாருக்கு ஸ்காட்லாந்து பொலிஸ் பயிற்சியளிப்பதற்கு பல்தரப்பினர் கடும் கண்டனம்!

T

The Leader Desk

ஜனவரி 11, 2021 • 1:35 PM

இலங்கை பொலிசாருக்கு ஸ்காட்லாந்து பொலிஸ் பயிற்சியளிப்பதற்கு பல்தரப்பினர் கடும் கண்டனம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தனக்கு எதிரானவர்கள் மீது அச்சுறுத்தி பணியவைக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசு முன்னெடுத்தது எனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நிலையில், அதன் பொலிசாருக்கு அளிக்கும் பயிற்சியளிக்கும் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து ஸ்காட்லாந்தில் கேள்விகள் எழுந்துள்ளன.
  • கடந்த காலங்களில் இந்தியா, நமீபியா, மலாவி, பாகிஸ்தான் மற்றும் ஜாம்பியா நாட்டுப் படைகளுக்கும் தாங்கள் பயிற்சி அளித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
  • இலங்கையின் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரிப்பது, சமூகப் பாதுகாப்பைப் மேற்கொள்வது தொடர்பில் இலங்கை பொலிசாருக்கு பயிற்சி அளிக்க எவ்வளவு நிதி அளிக்கப்படுகிறது என்பதை ஸ்காட்லாந்து பொலிசார் தெரிவிக்க மறுத்தாலும் முன்னர் அப்படியான பயிற்சி மூலம் அவர்கள் £700,000 வரை ஈட்டியுள்ளனர்.
எழுத்து அளவு:

இலங்கை பொலிசாரின் சிறப்பு அதிரடிப் படையினருக்கு வன்முறை, சித்திரவதை மற்றும் ஆட்கள் காணாமல் போவது ஆகியவற்றுடன் தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கும் சூழலில், எதிர்வரும் 2023ஆம் ஆண்டு வரையுள்ள இந்த புதுப்பிக்கப்பட்டுள்ள ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தனக்கு எதிரானவர்கள் மீது அச்சுறுத்தி பணியவைக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசு முன்னெடுத்தது எனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நிலையில், அதன் பொலிசாருக்கு அளிக்கும் பயிற்சியளிக்கும் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து ஸ்காட்லாந்தில் கேள்விகள் எழுந்துள்ளன.

`போர் குற்றங்களிலிருந்து தப்பித்த பிரிட்டிஷ் கூலிப்படையினர்-கீனி மீனி` எனும் புத்தகத்தை எழுதியுள்ள ஃபில் மில்லர், ``இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு, ஸ்காட்லாந்து பொலிசார் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவது ஆச்சரியமாகவுள்ளது` என்று கூறுகிறார். அந்தக் கூலிப்படையால் பயிற்சி அளிக்கப்பட்ட இலங்கையின் துணை இராணுவக் குழுவொன்று தமிழ்க் கிராமங்களை தீக்கிரையாக்கியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை தமது நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ள ஸ்காட்லாந்து பொலிசார், அந்த ஒப்பந்தத்தின் மதிப்பை வெளியிடவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான இந்தப் பயிற்சிக்கு பிரிட்டிஷ் தூதரகம் நிதியுதவி அளிக்கிறது. ``ஐ நாவின் நீடித்திருக்கக் கூடிய வளர்ச்சித் திட்ட இலக்குகள், குறிப்பாக பாலின சமன்பாடு, சமாதானம் மற்றும் நீதி, வலுவான நிறுவனங்கள்ஒத்துழைப்புகள் மூலம் முன்னெடுத்து இலங்கை மனித உரிமைகள் அடிப்படையில் அதற்கு ஆதரவளிக்கிறது`` என்று ஸ்காட்லாந்து பொலிசாரின் தலைமை அதிகாரி டேவிட் டன்கன் கூறுகிறார்.

தாம் இலங்கையில் செய்யும் பணிகளை ஸ்காட்லாந்து அரசு அறிந்துள்ளது என்று ஸ்காட்லாந்து பொலிசார் கூறுகின்றனர். வெளிநாடுகளில் தாங்கள் அளிக்கும் பயிற்சி குறித்து ஸ்காட்லாந்து பொலிஸ் ஆணையம் மற்றும் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சிக்கான அலுவலகம் அறிந்துள்ளன என்றும் ஸ்காட்லாந்து பொலிஸ் கூறுகிறது. கடந்த காலங்களில் இந்தியா, நமீபியா, மலாவி, பாகிஸ்தான் மற்றும் ஜாம்பியா நாட்டுப் படைகளுக்கும் தாங்கள் பயிற்சி அளித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

``ஸ்காட்லாந்து தேசியக் கட்சியான எஸ்.என்.பி கடந்த காலங்களில் இங்கிலாந்து பொலிசார் பஹ்ரைன் போன்ற அடக்குமுறை நாடுகளுக்கு பயிற்சி அளித்ததை கண்டித்துள்ளது`` என்று கூறும் ஃபில் மில்லர், இலங்கையில் தமது விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்ததற்காகத் தமிழர்கள் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் நிலையில் எவ்வாறு அந்நாட்டுடன் இணைந்து செயல்பட ஸ்காட்லாந்து பொலிசாரை ஸ்காட்டிஷ் அமைச்சர்கள் அனுமதித்தனர் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையின் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரிப்பது, சமூகப் பாதுகாப்பைப் மேற்கொள்வது தொடர்பில் இலங்கை பொலிசாருக்கு பயிற்சி அளிக்க எவ்வளவு நிதி அளிக்கப்படுகிறது என்பதை ஸ்காட்லாந்து பொலிசார் தெரிவிக்க மறுத்தாலும் முன்னர் அப்படியான பயிற்சி மூலம் அவர்கள் £700,000 வரை ஈட்டியுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று கத்தோலிக்க சமாதான அறக்கட்டளையான பேக்ஸ் கிறிஸ்டி கோரியுள்ளது. ஸ்காட்லாந்து பொலிசிக்கும் இலங்கைக்கும் இடையேயான உறவு ``கவலையளிக்கிறது`` என்று அந்த அமைப்பின் மரியன் பேலிஸ்ட்டர் கூறுகிறார். சர்வதேச அமைதி இயக்கமொன்றின் உறுப்பினர் எனும் வகையில் இது தொடர்பில் தாங்கள் பல மட்டங்களில் கவலையடைவதாக அவர் தெரிவித்தார்.

``அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு அதிலும் குறிப்பாக தமது பிரஜைகளுக்கு எதிராக வன்முறையை முன்னெடுக்கும் ஒரு நாட்டை தமது அரசு எப்படி மன்னிக்க முடியும் என்று ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் நீல் ஃபிண்ட்லே கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையின் சிறப்புப் படைகள் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை முன்னெடுத்து வருகிறது என்று அவர் கூறுகிறார்.

ஸ்காட்லாந்து பொலிசாரின் இந்த முன்னெடுப்பைச் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டியும் கடுமையாக விமர்சித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கை பொலிசாருக்கு ஸ்காட்லாந்து பொலிஸ் பயிற்சியளிப்பதற்கு பல்தரப்பினர் கடும் கண்டனம்! | Tamil Leader | We Lead the Nation