Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புகளை பேணியோர் தொடர்பில் ஆராய நடவடிக்கை!

T

The Leader Desk

ஜனவரி 10, 2021 • 2:22 PM

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புகளை பேணியோர் தொடர்பில் ஆராய நடவடிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், கடந்த 5ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்ததுடன் அதற்கடுத்த நாள் நுழைவாயிலுக்குள் பிரவேசித்து பின்னர் அங்கிருந்து வௌியேறியமையை படைக்கள சேவிதர் உறுதிப்படுத்தியுள்ளார்.
  • என்பது தொடர்பிலும் கண்காணிக்கப்பட்டுள்ளது.
  • தயாசிறி ஜயசேகரவை சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, கடந்த 08 ஆம் திகதி தனியார் வைத்தியசாலையில் PCR பரிசோதனையை மேற்கொண்டார்.
எழுத்து அளவு:

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், கடந்த 5ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்ததுடன் அதற்கடுத்த நாள் நுழைவாயிலுக்குள் பிரவேசித்து பின்னர் அங்கிருந்து வௌியேறியமையை படைக்கள சேவிதர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய, ரவூப் ஹக்கீமை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் ஆகியோரை அடையாளங்காணும் நோக்கில் பாதுகாப்பு கெமராவினூடாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு அருகில் அமர்ந்திருந்த எதிர்கட்சி உறுப்பினர்கள், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியிருந்தனரா? இல்லையா? என்பது தொடர்பிலும் கண்காணிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்‌ஷ்மன் கிரியெல்ல மற்றும் கயந்த கருணாத்திலக்க ஆகியோருக்கு அருகில் பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீமின் ஆசனம் காணப்பட்டதாக அறியக் கிடைக்கின்றது

இதனிடையே, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தற்போது ஹிக்கடுவ சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தயாசிறி ஜயசேகரவை சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, கடந்த 08 ஆம் திகதி தனியார் வைத்தியசாலையில் PCR பரிசோதனையை மேற்கொண்டார்.

இதன்போது, தனக்கு கொரோனா தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக தனது ட்விட்டர் பதிவினூடாக அவர் தெரிவித்திருந்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புகளை பேணியோர் தொடர்பில் ஆராய நடவடிக்கை! | Tamil Leader | We Lead the Nation