Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கல்வி செயலணியின் உறுப்பினரிடமிருந்து ஆசிரியருக்கு அச்சுறுத்தல்!

T

The Leader Desk

ஜனவரி 7, 2021 • 4:11 PM

கல்வி செயலணியின் உறுப்பினரிடமிருந்து ஆசிரியருக்கு அச்சுறுத்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறித்த ஆசிரியர் ஏற்கனவே மாணவர்களை பாடசாலையில் இணைத்துக்கொள்வதில் தவறான நடைமுறையை பின்பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து ஒழுக்காற்று விசாரணையை எதிர்கொண்டுள்ளதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று குற்றஞ்சாட்டுகின்றது.
  • கடந்த வருடம் செப்டெம்பர் 2ஆம் திகதியிடப்பட்ட இடமாற்றக் கடிதத்திற்கு, ஆசிரியர் எச்.ஜி வசந்த இந்த வருடம் ஜனவரி 4 ஆம் திகதி விசாகா வித்தியாலயத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் புதன்கிழமை (06) வெளியிட்ட ஊடக அறிக்கையில்தெரிவித்துள்ளது.
  • ஒரு ஆசிரியருக்கு எதிராக விசாகா அதிபர் எடுத்த இந்த அவமானகரமான நடவடிக்கையை இலங்கை ஆசிரியர் சங்கம் கடுமையாக கண்டிப்பதாக, ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டார்லின் கூறியுள்ளார்.
  • "மேலும், விசாகா வித்தியாலய அதிபர் ஆசிரியர் இடமாற்ற பணிப்பாளரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரை கடுமையாக சாடியுள்ளார்” இது தொடர்பாக, எச்.ஜி வசந்த என்ற ஆசிரியர், ஜனவரி 5, செவ்வாய்க்கிழமை கல்விச் செயலாளரிடம் எழுத்து மூலமாக முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்து அளவு:

குறித்த ஆசிரியர் ஏற்கனவே மாணவர்களை பாடசாலையில் இணைத்துக்கொள்வதில் தவறான நடைமுறையை பின்பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து ஒழுக்காற்று விசாரணையை எதிர்கொண்டுள்ளதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று குற்றஞ்சாட்டுகின்றது.

கொழும்பு  புனித பவுல் பெண்கள் கல்லூரியில் பணியாற்றிய எச்.ஜி வசந்த என்ற ஆசிரியர், கல்விச் செயலாளரின் இடமாற்ற உத்தரவிற்கு அமைய, கொழும்பு விசாகா வித்தியாலயத்திற்கு இடமாற்றப்பட்டார்.

கடந்த வருடம் செப்டெம்பர் 2ஆம் திகதியிடப்பட்ட இடமாற்றக் கடிதத்திற்கு, ஆசிரியர் எச்.ஜி வசந்த இந்த வருடம் ஜனவரி 4 ஆம் திகதி விசாகா வித்தியாலயத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் புதன்கிழமை (06) வெளியிட்ட  ஊடக அறிக்கையில்தெரிவித்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் விசாகா வித்தியாலயத்தின் அதிபர், சந்தமாலி அவிருப்பால, புனித பவுல் கல்லூரியின் அதிபரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரது உதவியாளர்கள் தனது பாடசாலையில் பணியாற்ற முடியாது என அறிவித்து, சேவையில் இருந்து நீக்கும் கடிதத்தை அவர் மேலே வீசியெறிந்துள்ளார்.

மேலும், நான்கு பாடசாலை காவலர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து  அதிபரின் அறையிலிருந்து குறித்த ஆசிரியரை வெளியே இழுத்து தள்ளுவதற்கு முயற்சித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

ஒரு ஆசிரியருக்கு எதிராக விசாகா அதிபர் எடுத்த இந்த அவமானகரமான நடவடிக்கையை இலங்கை ஆசிரியர் சங்கம் கடுமையாக கண்டிப்பதாக, ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டார்லின் கூறியுள்ளார்.

"மேலும், விசாகா வித்தியாலய அதிபர் ஆசிரியர் இடமாற்ற பணிப்பாளரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரை கடுமையாக சாடியுள்ளார்”  

இது தொடர்பாக, எச்.ஜி வசந்த என்ற ஆசிரியர், ஜனவரி 5, செவ்வாய்க்கிழமை  கல்விச் செயலாளரிடம் எழுத்து மூலமாக முறைப்பாடு செய்துள்ளார். அதே நாளில் பம்பலப்பிட்டிய பொலிஸிலும், கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பிலும் முறைப்பாடு செய்துள்ளார்.

கல்வி அமைச்சின் பக்கச்சார்பு

விசாகா வித்தியாலயத்தின் அதிபரின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து கடந்த காலங்களில் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், சமரச நடவடிக்கைகளின் போது கல்வி அமைச்சு பக்கச்சார்பாக செயற்படுவதாக சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாகா வித்தியாலயத்தின் அதிபர் மீது கடந்த வருடம்  தரம் ஒன்றுக்கு மாணவர்களைச் சேர்ப்பது தொடர்பிலான முறைக்கேடு குறித்து குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் விசாகா கல்லூரியின் முதல் வகுப்புக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக 15 முறைகேடு குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையை  பொது சேவை ஆணைக்குழு கடந்த 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 25ஆம் திகதி வெளியிட்டுள்ளதாகவும், இது தொடர்பான ஒழுக்காற்று விசாரணை இதுவரை நிறைவு செய்யப்படவில்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

"குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள அவர், 2021ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான நேர்காணல் குழுவில் பங்கேற்கக் கூடாது என இலங்கை ஆசிரியர் சங்கம் கல்விச் செயலாளர் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது”

இது தொடர்பில் கண்காணிக்குமாறு, கோரிக்கை விடுத்து, பொதுச் சேவை ஆணைக்குழு கடந்த 2020 ஜூலை 7ஆம் திகதி, கல்விச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டார்லின் குற்றம் சாட்டியுள்ளார்.

கல்வி அமைச்சின் கீழ் பணிபுரியும் அதிபர் தன்னிச்சையாகவும் நடந்து கொண்டாலும், அவர் ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக, இலங்கை கல்வி தொடர்பான  ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை முரண்பாடான விடயமாக அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...