Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் ரணிலுக்கும் இடையே விசேட சந்திப்பு!

T

The Leader Desk

ஜனவரி 7, 2021 • 9:12 AM

இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் ரணிலுக்கும் இடையே விசேட சந்திப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொவிட் தொற்றுநோயை எதிர்கொண்டு பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்தியாவும் இலங்கையும் பொருளாதார ரீதியாக நெருக்கமாக செயற்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளியுறவு அமைச்சருக்கு மேலும் தெரிவித்தார்.
  • தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துவிட்டு இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் ஐ.தே.க தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.
  • முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (07) காலை இந்திய தூதரக உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்த இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
எழுத்து அளவு:

கொவிட் தொற்றுநோயை எதிர்கொண்டு பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்தியாவும் இலங்கையும் பொருளாதார ரீதியாக நெருக்கமாக செயற்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளியுறவு அமைச்சருக்கு மேலும் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (07) காலை இந்திய தூதரக உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்த இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தூதரக வட்டாரங்களின்படி, இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர், ஐதே.க  தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவை தனது இராஜதந்திர சந்திப்புக்கு வெளியே சந்தித்தார்.

தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துவிட்டு இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் ஐ.தே.க தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொவிட் தொற்றுநோயால் இரு நாடுகளும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சருடன் நீண்ட கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டார்.

இலங்கைக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதற்காக அரசாங்கத்துடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த போக்கை மிகவும் பாராட்டியதோடு, இந்த கடினமான காலங்களில் இந்தியாவும் இலங்கையும் நெருக்கமாக பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...