Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

இலங்கையில் தாய்மார் இறப்பு விகிதத்தில் உயர்வு!

T

The Leader Desk

ஜனவரி 6, 2021 • 3:59 PM

இலங்கையில் தாய்மார் இறப்பு விகிதத்தில் உயர்வு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தாய்மார் இறப்பு விகிதம் குறைந்த மட்டத்தில் காணப்பட்டாலும், இலங்கையில் தாய் இறப்புகளின் எண்ணிக்கை கடந்த வருடம் 150ஆக உயர்வடைந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
  • ஏறக்குறைய 40 வருடங்களாக தாய்மார் இறப்புகளை கண்காணிப்பதில் நாடு தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், இது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
  • வைத்தியர் பிரதீப் டி சில்வா இலங்கை மகப்பேறியல் மற்றும் மகளிர் வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் 35ஆவது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விழாவில் உரையாற்றிய அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாரச்சி, 2002ஆம் ஆண்டில் 194கா காணப்பட்ட தாய்மார் இறப்பு விகிதத்தை  2019ஆம் ஆண்டில் 92ஆக குறைக்க முடிந்துள்ளதாக, சுகாதாரத் தகவல்கள் தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

பிராந்தியத்தில் உள்ள  ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தாய்மார் இறப்பு விகிதம் குறைந்த மட்டத்தில் காணப்பட்டாலும், இலங்கையில் தாய் இறப்புகளின் எண்ணிக்கை கடந்த வருடம் 150ஆக உயர்வடைந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

இந்த நிலைமையை மாற்றவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என அமைச்சர் கூறியுள்ளார்.

"இந்த நிலைமையைக் குறைத்து கர்ப்பிணிப் பெண்களை பாதுகாப்பது நமது அரசாங்கத்தின் பொறுப்பாகும். மகப்பேறியல் மற்றும் மகளிர் வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், அதிநவீன வைத்திய உபகரணங்கள் உள்ளிட்ட  வைத்திய நிலையங்களை நிறுவுவதற்கும் மகப்பேறியல் மற்றும் மகளிர் வைத்தியத் துறையை விரிவுபடுத்துவதற்கும் இந்த வருடத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்." என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஏறக்குறைய 40 வருடங்களாக தாய்மார் இறப்புகளை கண்காணிப்பதில் நாடு தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், இது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரசவம் வரை கர்ப்பிணித் தாய்மார்களைப் பராமரிப்பதற்கான பிரிவு மகப்பேறியல் எனவும், பெண் இனப்பெருக்க அமைப்பு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரிவு மகளிர் வைத்தியப் பிரிவு எனவுத் அழைக்கப்படுவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மகப்பேறியல் மற்றும் மகளிர் வைத்தியத் துறை தாய் மற்றும் பெண்கள் பராமரிப்பில் மிக முக்கியமான துறையாக கருதப்படுகிறது.

வைத்தியர் பிரதீப் டி சில்வா இலங்கை மகப்பேறியல் மற்றும் மகளிர் வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் 35ஆவது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு நாட்டின் சுகாதார அமைப்பின் தரத்தை அளவிடுவதற்கான ஒரு அளவுகோலாக தாய்வழி இறப்பு விகிதத்தை சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சர், கர்ப்பம் ஒரு பெண்ணுக்கு இனிமையான அனுபவமாக இருக்க வேண்டும் எனவும்,  ஒரு வேதனையான அனுபவமாக இருக்கக்கூடாது எனவும், ஒரு பெண் அமைச்சராக தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கையில் தாய்மார் இறப்பு விகிதத்தில் உயர்வு! | Tamil Leader | We Lead the Nation