Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஆசிரியர் வெற்றிடங்களுக்காக விமானப்படையினர்!

T

The Leader Desk

ஜனவரி 4, 2021 • 4:23 AM

 ஆசிரியர் வெற்றிடங்களுக்காக விமானப்படையினர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கல்வித் துறையில் ஆசிரியர் பற்றாக்குறை உக்கிரமடைந்துள்ளமையால், பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
  • ஏற்கனவே கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற சுமார் 3000 ஆசிரியர்கள் நியமனம் கிடைக்காமல் ஒருவருடமாக காத்திருக்கின்றனர்.
  • விசேடமாக கிராமப்புற பாடசாலைகளிலும், நகர்புற பாடசாலைகளிலும் மாணவர்களின் கல்விக்குத் தேவையான ஆசிரியர்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தவறியுள்ளது.
எழுத்து அளவு:

கல்வித் துறையில் ஆசிரியர் பற்றாக்குறை உக்கிரமடைந்துள்ளமையால், பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. விசேடமாக கிராமப்புற பாடசாலைகளிலும், நகர்புற பாடசாலைகளிலும் மாணவர்களின் கல்விக்குத் தேவையான ஆசிரியர்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தவறியுள்ளது.

பொதுவாக பாடசாலைகளில் சில பாடங்களை கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாமையால், வேறு பாடங்களுக்காக நியமனம் பெற்ற ஆசிரியர்களிடம் அந்தப் பாடங்களை ஒப்படைத்துவிட்டு பிரச்சினைக்கு தீர்வுகாண அதிபர்கள் முயன்று வருகின்றனர். ஆனால்,  பல வருடங்களாக நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்ப அரசாங்க உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி வருடந்தோறும் வெட்டப்படும் நிலையில் புதிய ஆசிரியர் நியமனங்களை வழங்க அரசாங்கம் தவறியுள்ளது.

ஏற்கனவே கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற சுமார் 3000 ஆசிரியர்கள் நியமனம் கிடைக்காமல் ஒருவருடமாக காத்திருக்கின்றனர். இவர்களை புறந்தள்ளிவிட்டு ஆயுதப் படையினருக்கு புதிய நியமனங்களை வழங்கி கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது தெரிகிறது.

ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளில் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்ற பாடங்களை கற்பிப்பதற்காக விமானப் படை உறுப்பினர்களை ஈடுபடுத்த விமானப்படைத் தளவி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன முன்வைத்த ஆலோசனைக்கு கல்வி அமைச்சு இணங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் முதலாவதாக வவுனியாவை அன்மித்த கஷ்டப் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு மேற்படி பாடங்களை கற்பிப்பதற்காக விமானப்படை ஈடுபடுத்தப்படவுள்ளது. ஏனைய பிரதேசங்களிலுள்ள கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் விமானப் படையினரை ஈடுபடுத்தி மாணவர்களுக்கு கற்பிப்பது சம்பந்தமாக அரசாங்கம் அவதானித்து வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஆசிரியர் வெற்றிடங்களுக்காக விமானப்படையினர்! | Tamil Leader | We Lead the Nation