Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

முஸ்லிம்கள் தங்களது உரிமையை கேட்பது அரசியல் நோக்கம் கொண்டது! ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

T

The Leader Desk

ஜனவரி 3, 2021 • 4:41 AM

முஸ்லிம்கள் தங்களது உரிமையை கேட்பது அரசியல் நோக்கம் கொண்டது!  ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
  • அவர்களுடைய மதத்திலும் உடல்களை தகனம் செய்வது அனுமதிக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் முடிவை உலக சுகாதார ஸ்தாபனமே முதலில் எடுத்தது இந்த விதிமுறைகள் எங்கள் நாட்டிற்கும் பொருந்தும்,கொரோனா வைரசிரனை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடாக நாங்கள் மாறினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் முடிவை உலக சுகாதார ஸ்தாபனமே முதலில் எடுத்தது இந்த விதிமுறைகள் எங்கள் நாட்டிற்கும் பொருந்தும்,கொரோனா வைரசிரனை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடாக நாங்கள் மாறினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் உடல்களை தகனம் செய்யும் முடிவை எடுத்தவேளை எவரும் அதற்கு எதிராக கரிசனைகளை வெளியிடவில்லை எனவும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தின் சில பிரிவினர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதை அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கையாக நான் கருதுகின்றேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் -அது பிழை என தெரிவிப்பார்கள் என்றால் கத்தோலிக்க மக்களும் அது குறித்த கரிசனையை வெளியிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களுடைய மதத்திலும் உடல்களை தகனம் செய்வது அனுமதிக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு இனத்திற்கு மாத்திரம் உரிய விடயமில்லை.

சிலவங்குரோத்து நிலையிலுள்ள அரசியல்கட்சிகளும் அரசியல் தலைவர்களும் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக இதனை பயன்படுத்த முயல்கின்றனர் என ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ குற்றம்சாட்டியுள்ளார்.

பொறுப்புணர்வுள்ள அரசாங்கம் என்ற அடிபபடையில் உடல்களை தகனம் செய்யவேண்டுமா அடக்கம் செய்யவேண்டுமா என ஆராய்வதை விட நாங்கள் பொதுமக்களை கொரோனா வைரசிலிருந்து பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தங்கள் வங்குரோத்து அரசியல் காரணமாக மக்களை தவறாக வழிநடத்துவதற்காக பல அறிக்கைகளை வெளியிடுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்குகள் குறித்து ஜனாதிபதியோ அரசாங்கமோ தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது சுகாதார அதிகாரிகளே இது தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் ஒரு குழுவினர் இந்த விவகாரத்தினை இனரீதியிலானதாக மாற்றுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...