Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

2020 பொதுத்தேர்தலில் தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது! த ஹிந்து பத்திரிகைக்கு சிறிசேன பேட்டி

T

The Leader Desk

டிசம்பர் 31, 2020 • 1:30 PM

2020 பொதுத்தேர்தலில் தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது! த ஹிந்து பத்திரிகைக்கு சிறிசேன பேட்டி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்தியாவில் ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் கருத்து வௌியிட்ட முன்னாள் ஜனாதிபதி, 2020 பொதுத்தேர்தலின் போது தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
  • COVID தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்துள்ள நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற வகையில் தாமும் அந்த நிலைப்பாட்டிற்கு இணங்குவதாக அவர் கூறியுள்ளார்.
  • ஆவது திருத்தத்தை இரத்து செய்வது இலகுவான விடயம் அல்லவெனவும், 13ஆவது திருத்தம் இரத்து செய்யப்பட்டால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விரிசல் ஏற்படக்கூடும் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

இந்தியாவில் ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் கருத்து வௌியிட்ட முன்னாள் ஜனாதிபதி, 2020 பொதுத்தேர்தலின் போது தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

தமது கட்சி மாகாண சபைத் தேர்தலில் கூட்டணியில் போட்டியிடுவதற்கு தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதிர்பார்க்கும் அளவில் நியாயமான வேட்பாளர் எண்ணிக்கை கட்சிக்குக் கிடைக்கும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, COVID தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான உரிமை முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

COVID தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்துள்ள நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற வகையில் தாமும் அந்த நிலைப்பாட்டிற்கு இணங்குவதாக அவர் கூறியுள்ளார்.

13 ஆவது திருத்தத்தை இரத்து செய்வது இலகுவான விடயம் அல்லவெனவும், 13ஆவது திருத்தம் இரத்து செய்யப்பட்டால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விரிசல் ஏற்படக்கூடும் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

பிராந்தியத்தில் இந்திய – இலங்கை உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளை இரத்து செய்வது என்பது தீயுடன் விளையாடுவதைப் போன்றது எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

2020 பொதுத்தேர்தலில் தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது! த ஹிந்து பத்திரிகைக்கு சிறிசேன பேட்டி | Tamil Leader | We Lead the Nation