Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

மகா சங்கத்தின் சொல்லுக்கு கீழ்ப்படிகிறது அரசு! கொவிட் முடிவடையும் வரை மாகாண சபை தேர்தல் நடைபெறாது!

T

The Leader Desk

டிசம்பர் 30, 2020 • 4:42 AM

மகா சங்கத்தின் சொல்லுக்கு கீழ்ப்படிகிறது அரசு! கொவிட் முடிவடையும் வரை மாகாண சபை தேர்தல் நடைபெறாது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மகா சங்கத்தினரின் வேண்டுகோளுக்கமைய கொவிட் தொற்று நோயினால் மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்க கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
  • மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது, ​​சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிரி ஜயசேகர, கொரோனா வைரஸ் பரவுவதால், இந்த நேரத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
  • அனைத்து மாகாண சபைகளும் இப்போது இயற்கையான மரணத்தை எதிர்கொள்கின்றன என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
எழுத்து அளவு:

மகா சங்கத்தினரின் வேண்டுகோளுக்கமைய கொவிட் தொற்று நோயினால் மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்க கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

அனைத்து மாகாண சபைகளும்  இப்போது இயற்கையான மரணத்தை எதிர்கொள்கின்றன என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

கட்சித்தலைமைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் வாசுதேவ  நாணயக்கார கருத்து தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் தற்காலிக அடிப்படையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

இந்தியாவிடம்தான் நாம் கேட்க வேண்டும் சிறி லங்கா சுதந்திர கட்சி

கட்சி தலைமைக் கூட்டத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதோடு, அவர்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கும் விளக்கமளிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது, ​​சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிரி ஜயசேகர, கொரோனா வைரஸ் பரவுவதால், இந்த நேரத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

ஆனால் ஜே. ஆர். ஜெயவர்த்தனனால் நிறுவப்பட்ட மாகாண சபை அமைப்பு செயல்படுத்தப்படுமா இல்லையா என்பதை எம்மால் தீர்மானிக்க முடியாது இது இந்தியாவுடன் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் என்றார்.

இருப்பினும், அனைத்து மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களையும் திட்டமிட்டபடி நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறுகிறார்.

நெடுஞ்சாலை அமைச்சின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்

நாங்கள் இப்போது புதிய அரசியலமைப்பு முறையைப் பயன்படுத்துவது பற்றி கலந்துரையாடி வருகின்றோம்," வரவிருக்கும் அனைத்து மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களையும் திட்டமிட்டபடி நடத்த நாங்கள் தற்போது தயாராகி வருகிறோம்.மாகாண சபை தேர்தல் தொடர்பாக மகா சங்கத்தினரிடமிருந்து ஒரு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஒரு கட்சியாக, இந்தத் தேர்தல்கள் அனைத்தையும் சரியான நேரத்தில் நடத்துவதே எங்கள் முடிவு என்று தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...