Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கல்முனையை மாநகரை முற்றாக முடக்க வேண்டுகோள்!

T

The Leader Desk

டிசம்பர் 29, 2020 • 4:55 PM

கல்முனையை மாநகரை முற்றாக முடக்க வேண்டுகோள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் ஏற்பாட்டில் சுபத்ராராமய விகாராதிபதி வண.
  • சுகாதாரம் பாதுகாப்புத்துறைகளும் ஆலோசனை தரவேண்டும், என்றார்.
  • அதேவேளை கல்முனை மாநகர எல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 228 தொற்றுக்களாக அதிகரித்திருக்கிறது.
  • கல்முனை தெற்கில் 170 பேரும் சாய்ந்தமருதில் 34 பேரும் கல்முனை வடக்கில் 14 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
எழுத்து அளவு:

த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் ஏற்பாட்டில்  சுபத்ராராமய விகாராதிபதி வண. ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கல்முனை சர்வாத்த சித்திவிநாயகராலய பிரதமகுரு சிவஸ்ரீ. க.கு. சச்சிதானந்த சிவக்குருக்கள் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான வி. சிவலிங்கம் கே. செல்வராசா எஸ். சந்திரன் ஆகியோர் சேர்ந்து இந்தச் சந்திப்பை மேற்கொண்டதுடன் பொது அமைப்புகளின் மகஜர்களையும் கையளித்தனர்.

சுகாதாரப்பணிப்பாளர் டொக்டர் சுகுணன் பதிலளிக்கையில்,

முடக்கும் அதிகாரம் எம்மிடம் இல்லை. ஆனால் தொற்றுக்களின் விபரம் மற்றும் சந்தையின் ஆபத்தான நிலை தொடர்பாக நாம் எமது தலைமைக்கும் கொவிட் குழுவுக்கும் அறிவிப்போம். முடக்குவது தொடர்பாக அவர்களே தீர்மானிப்பார்கள் என்றார்.

மேயர் றக்கீக் பதிலளிக்கையில் கோரிக்கையை ஏற்கிறேன். ஆனால் முழு மாநகரையும் முடக்குவது பற்றி இன்னும் ஆராயவேண்டும். சுகாதாரம் பாதுகாப்புத்துறைகளும் ஆலோசனை தரவேண்டும், என்றார்.

அதற்கு குழுவினர் சார்பாக உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கூறுகையில்:

எல்லாவற்றையும் முடக்க கஷ்டமென்றால் எமது வடக்கு தமிழ்ப் பிரதேசங்களையாவது முடக்கி எமது மக்களைக் காப்பாற்றுங்கள் என்றார்.

மேயர் பதிலளிக்கையில் எதற்கும் கலந்துரையாடலை நடாத்தி முடிவுக்கு வருவோம் என்றார்.

நேற்றுமுன்தினம் மாலை  கல்முனை விகாரையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் மேற்படி முடக்கல் கோரிக்கையை பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களிடம் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

அதேவேளை கல்முனை மாநகர எல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 228 தொற்றுக்களாக  அதிகரித்திருக்கிறது. கல்முனை தெற்கில் 170 பேரும் சாய்ந்தமருதில் 34 பேரும் கல்முனை வடக்கில் 14 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனைக்குடியை மையமாகக் கொண்ட கல்முனை தெற்கு சுகாதாரப்பிரிவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக 170 ஆக உயர்ந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணிநேரத்தில், 41 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.லதாகரன் தொவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கல்முனையை மாநகரை முற்றாக முடக்க வேண்டுகோள்! | Tamil Leader | We Lead the Nation