Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

எங்கள் வேண்டுகோள்களை செவிமடுக்காவிட்டால் பிரிந்துசெல்ல தீர்மானித்துள்ளோம்! சிறிசேன

T

The Leader Desk

டிசம்பர் 27, 2020 • 8:50 AM

எங்கள் வேண்டுகோள்களை செவிமடுக்காவிட்டால் பிரிந்துசெல்ல தீர்மானித்துள்ளோம்! சிறிசேன

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்ற தேர்தலின் போது எங்களிற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர் இம்முறை எங்களை நியாயமான முறையில் நடத்தாவிட்டால் எங்கள் கட்சியின் உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் அவர்கள் எங்களிற்கு நெருக்கடி தருவார்கள் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
  • நாங்கள் சமர்ப்பித்த வேட்பாளர்களை ஏற்றுக்கொண்டிருந்தால் நாடாளுமன்றத்தில் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணப்பட்டிருப்பார்கள் தற்போது சுதந்திரக்கட்சிக்கு 14 உறுப்பினர்களே உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
  • தமிழர் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதன் ஒரு பகுதியாகவே மாகாணசபைகள் உருவாக்கப்பட்ட என தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் 13 வதுதிருத்தம் உருவானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
  • நாங்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு 13 திருத்தம் உதவியுள்ளதா என்பது குறித்து பார்க்கவேண்டும்,மாகாணசபை முறை குறித்து உரிய ஆய்வுகள் இடம்பெறவில்லை என்றே கருதுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

நாடாளுமன்ற தேர்தலின் போது எங்களிற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர் இம்முறை எங்களை நியாயமான முறையில் நடத்தாவிட்டால் எங்கள் கட்சியின் உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் அவர்கள் எங்களிற்கு நெருக்கடி தருவார்கள் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எங்கள் வேண்டுகோள்கள் செவிமடுக்கப்படாவிட்டால் பிரிந்துசெல்ல தீர்மானித்துள்ளோம் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொதுதேர்தலின் போது எங்களிற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது, சிலமாவட்டங்களில் எங்கள் கட்சியினருக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

களுத்துறை நுவரேலியாவில் எவருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள சிறிசேன கம்பஹாவில் வெற்றிபெறக்கூடிய எங்கள் வேட்பாளர்களில் ஒருவருக்கே வாய்ப்பளிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் சமர்ப்பித்த வேட்பாளர்களை ஏற்றுக்கொண்டிருந்தால் நாடாளுமன்றத்தில் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணப்பட்டிருப்பார்கள் தற்போது சுதந்திரக்கட்சிக்கு 14 உறுப்பினர்களே உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதன் ஒரு பகுதியாகவே மாகாணசபைகள் உருவாக்கப்பட்ட என தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் 13 வதுதிருத்தம் உருவானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு 13 திருத்தம் உதவியுள்ளதா என்பது குறித்து பார்க்கவேண்டும்,மாகாணசபை முறை குறித்து உரிய ஆய்வுகள் இடம்பெறவில்லை என்றே கருதுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

30 வருடங்களிற்கு பின்னரும் மாகாணசபை முறை வெற்றியா தோல்வியா என்பதை நாங்கள் இன்னமும் உறுதிசெய்யவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மாகாணசபைமுறைக்காக செலவிடப்படும் நிதி குறித்தும் கேள்விகள் எழுகின்றன என தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன நாங்கள் எதிர்பார்த்த எதுவும் மாகாணசபை முறையிலிருந்து கிடைக்கவில்லை என்பதே எனது கருத்து எனவும் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளில் நாங்கள் முதலீடு செய்த பணத்தின் மூலம் உரிய பலாபலன்கள் கிடைக்கவில்லை,சமூக சகவாழ்வோ பொருளாதார பலாபலன்களோ கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...