Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

போராட்டங்களை நடத்தி நெக்ஸ்ட் ஊழியர்கள் போனஸை பெற்றுக்கொண்டனர்!

T

The Leader Desk

டிசம்பர் 24, 2020 • 4:27 PM

போராட்டங்களை நடத்தி நெக்ஸ்ட் ஊழியர்கள் போனஸை பெற்றுக்கொண்டனர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொரோனா தொற்றுநோயால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வருட இறுதியில் போனஸ் வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் தொழிலாளர்களை, சர்வதேச ஆடை உற்பத்தி நிறுவனமொன்று குண்டர்களை பயன்படுத்தி அடக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
  • மீதமுள்ள 50 சதவீத போனஸை செலுத்த இந்தப் பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்படும் என தாபிந்து குழுமத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சமிலா துஷாரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
  • தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தடுக்க குண்டர்களைப் பயன்படுத்துவதாக ஆடை உற்பத்தி நிறுவனமான நெக்ஸ்ட் மீது குற்றம் சாட்டப்பட்டது.
எழுத்து அளவு:

கொரோனா தொற்றுநோயால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வருட இறுதியில் போனஸ் வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் தொழிலாளர்களை, சர்வதேச ஆடை உற்பத்தி நிறுவனமொன்று   குண்டர்களை பயன்படுத்தி அடக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தடுக்க குண்டர்களைப் பயன்படுத்துவதாக ஆடை உற்பத்தி நிறுவனமான நெக்ஸ்ட்  மீது குற்றம் சாட்டப்பட்டது.

நிறுவன  முகாமைத்துவம் பிரதான நுழைவாயில் வழியாக ஊழியர்கள் நுழைவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுத்ததோடு, பொலிஸ் அதிகாரிகள் அழைத்து வரப்பட்டதோடு, இந்த ஊழியர்கள் பாதாள உலக தரப்பினரால் அச்சுறுத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

டிசம்பர் 22 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, டிசம்பர் 23 முதல் டிசம்பர் 30 வரை நிறுவனத்தை மூடிவிட்டு  ஊழியர்களுக்கு கிறிஸ்மஸ் விடுமுறையை வழங்க நிர்வாகம் தீர்மானித்துள்ளதோடு, தொழிற் திணைக்கள அதிகாரிகளுடன்  ஜனவரி 8ஆம் திகதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 50 சதவீத போனஸை செலுத்த இந்தப் பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்படும் என தாபிந்து குழுமத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சமிலா துஷாரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுமார் 2,000 பேர் பணியாற்றும் நெக்ஸ்டில் சுமார் 600 ஊழியர்கள் இரண்டாவது கொரோனா தொற்று அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, பெரும்பாண்மையான பெண்கள் பணிபுரியும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் தொழிலாளர் பிரச்சினைகளை கையாளும் தாபிந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமிலா துஷாரி தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, சில தொழிலாளர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதோடு,  ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டதாக, தெரிவித்துள்ள சமிலா துஷாரி அந்த காலகட்டத்தில் ஊழியர்களின் கொடுப்பணவுகள் மற்றும் சம்பளங்களில் குறைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக  வலியுறுத்தினார்.

இத்தகைய சூழ்நிலையில், சில ஊழியர்களுக்கு டிசம்பர் மாதம், ஐம்பது சதவீத மிகக் குறைந்த அளவு  போனஸே கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

போனஸ் உள்ளிட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கட்டுநாயக்க சீப் வே லங்கா ஆடை நிறுவனம், ஊழியர்களுக்கு போனஸ் ஏதும் வழங்காமல், காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...