Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவதை எதிர்த்து எதிரக்கட்சி வீதியில் இறங்கியது!

T

The Leader Desk

டிசம்பர் 24, 2020 • 4:05 AM

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படுவதை எதிர்த்து எதிரக்கட்சி வீதியில் இறங்கியது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்க்கட்சித் தலைவர் கூறுகையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள விதிமுறைகளை புறக்கணித்து விட்டு பக்கச்சார்பான குழுவின் பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
  • போராட்டத்தில் இணைந்த சமகி ஜன பலவேகயவின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொரோனா தொற்று உள்ளவர்களை குற்றவாளிகளாக அரசு நடத்துவதாக குற்றம் சாட்டினார்.
  • பௌத்தர்களின் மண்ணை அரசாங்கம் பறிப்பதாக அவர் குற்றம் சாட்டினார், மேலும் உடல்கள் எரிக்கப்படுவது நாட்டின் அனைத்து குடிமக்களையும் பாதித்துள்ளது என்றும் கூறினார்.
எழுத்து அளவு:

"உயிருள்ளவர்களை மட்டுமல்ல, இறந்தவர்களையும் சுதந்திரமாக இருக்க அனுமதிக்காத ஒரு அரசாங்கத்தை நான் பார்த்ததில்லை.வெட்கம், ஜனாதிபதி அவர்களே, வெட்கம் பிரதமர் அவர்களே வெட்கம், அமைச்சர் அலி சப்ரி அவர்களே வெட்கம் அவ்வளவுதான்."

தேசிய சகவாழ்வு, உரையாடல் மற்றும் உத்தியோகபூர்வ மொழிகளின் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன், அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார், "கட்டாய தகனத்தை நிறுத்து" - "மத உரிமைகளுக்கு மதிப்பளி" என்ற தலைப்பில் பொரெல்ல கனத்தை மயானத்திற்கு முன் அமைதியான போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

SJB Mano

கொரோனா தொற்று நோயால் இறக்கும் முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதை எதிர்த்து பல நாட்களாக வீதிகளில் இறங்கி வரும் சமகி ஜன பலவேகயவின் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் டிசம்பர் 23 புதன்கிழமை காலை இடம் பெற்ற போராட்டத்தில் பௌத்த பிக்குகளும் இணைந்து ஊடக அறிக்கைகளை வெ ளியிட்டுள்ளனர்

விஞ்ஞானத்திற்கு பதிலாக அரசாங்கம் கட்டுக்கதைகளைத் தொடர்கிறது என்று குற்றம் சாட்டிய சமகி ஜன பலவேகய கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  ஒட்டுமொத்த சமூகத்தின் அடிப்படை உரிமைகளை அரசாங்கம் மீறுவதாக குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் கூறுகையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள விதிமுறைகளை புறக்கணித்து விட்டு  பக்கச்சார்பான குழுவின் பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்துவதாக  குற்றம் சாட்டினார்.SJB Sajith 2பௌத்தர்களின் மண்ணை அரசாங்கம் பறிப்பதாக அவர் குற்றம் சாட்டினார், மேலும் உடல்கள் எரிக்கப்படுவது நாட்டின் அனைத்து குடிமக்களையும் பாதித்துள்ளது என்றும் கூறினார்.

ஒரு பௌத்தருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பு கூட அரசாங்க முறைகேடுகளால் இழந்துவிட்டதாக சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

போராட்டத்தில் இணைந்த சமகி ஜன பலவேகயவின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொரோனா தொற்று உள்ளவர்களை குற்றவாளிகளாக அரசு நடத்துவதாக குற்றம் சாட்டினார்.

SJB Mujiber

"அவர்கள் தொற்றால் இறக்கும் போது, ​​அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை, அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர்களின் கடைசி மத சடங்குகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. எல்லாவற்றிற்கும் மாறாக, அவர்கள் குற்றவாளிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டு தகனம் செய்யப்படுகிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.

SJB Muslim

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...