Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

தொற்று நோய்க்குள்ளான தாதியர்களை கழிவறை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது!

T

The Leader Desk

டிசம்பர் 23, 2020 • 5:22 PM

தொற்று நோய்க்குள்ளான தாதியர்களை கழிவறை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொரோனா வைரஸ் தொற்றுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாதியர்களுக்குத் தேவையான வசதிகளையும் உணவுகளையும் வழங்குவதற்கு பதிலாக, கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியில் அவர்கள் அமர்த்தப்பட்டுள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
  • "ஆனால் இன்னும் இரண்டு தாதியர்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்தனர்.
  • நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த பின்னர் ஒருவர் மாற்றப்பட்டார்.
எழுத்து அளவு:

கொரோனா வைரஸ் தொற்றுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாதியர்களுக்குத் தேவையான வசதிகளையும் உணவுகளையும் வழங்குவதற்கு பதிலாக, கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியில் அவர்கள்  அமர்த்தப்பட்டுள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

"நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில், நோயாளர் விடுதியில் உள்ள ஏனைய நோயாளிகளுடன் இணைந்து கழிவறைகளை கழுவும்படி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.”

டிசம்பர் 22 செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசு தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய இந்த தகவலை வெளியிட்டார்.

கொரோனா தொற்றுக்குள்ளான தாதியர்கள் கழிவறைகளைக் சுத்தம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது, , இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அரச தாதியர் சங்கத்தின் தலைவர், எவ்வாறெனினும் அதன் பின்னர் இரண்டு தாதியர்களை அந்த வைத்தியசாலையில் இருந்து வேறு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

"ஆனால் இன்னும் இரண்டு தாதியர்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்தனர். நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த பின்னர்  ஒருவர் மாற்றப்பட்டார். இன்னும் ஒருவர் அந்த வைத்திசாலையில் இருக்கின்றார்.”

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சுகாதார ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டும் என அரச தாதியர் சங்கத் தலைவர் சமன் ரத்னபிரியா அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். சுகாதார ஊழியர்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அரச தாதியர் சங்க குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு முறை கொரோனா தொற்று அலையை எதிர்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் முன்னணின்று செயற்படும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தத் தவறியுள்ள நிலையில், அவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாதியர்களுக்குத் தேவையான வசதிகளையும் உணவுகளையும் வழங்குவதற்கு பதிலாக, கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியில் அவர்கள்  அமர்த்தப்பட்டுள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

"நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில், நோயாளர் விடுதியில் உள்ள ஏனைய நோயாளிகளுடன் இணைந்து கழிவறைகளை கழுவும்படி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.”

டிசம்பர் 22 செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசு தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய இந்த தகவலை வெளியிட்டார்.

கொரோனா தொற்றுக்குள்ளான தாதியர்கள் கழிவறைகளைக் சுத்தம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது, , இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அரச தாதியர் சங்கத்தின் தலைவர், எவ்வாறெனினும் அதன் பின்னர் இரண்டு தாதியர்களை அந்த வைத்தியசாலையில் இருந்து வேறு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

"ஆனால் இன்னும் இரண்டு தாதியர்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்தனர். நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த பின்னர்  ஒருவர் மாற்றப்பட்டார். இன்னும் ஒருவர் அந்த வைத்திசாலையில் இருக்கின்றார்.”

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சுகாதார ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டும் என அரச தாதியர் சங்கத் தலைவர் சமன் ரத்னபிரியா அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். சுகாதார ஊழியர்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அரச தாதியர் சங்க குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...