Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஒவ்வொரு இலங்கையருக்கும் மரணத்திற்குப் பிறகு தனது தாயகத்தில் அடக்கம் செய்யும் உரிமை இருக்க வேண்டும்! கரு ஜெயசூரிய

T

The Leader Desk

டிசம்பர் 22, 2020 • 4:28 PM

ஒவ்வொரு இலங்கையருக்கும் மரணத்திற்குப் பிறகு தனது தாயகத்தில் அடக்கம் செய்யும் உரிமை இருக்க வேண்டும்! கரு ஜெயசூரிய

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
  • கொவிட் 19 வைரஸால் இறக்கும் ஒருவரின் இறுதிச் சடங்கில் பின்பற்ற வேண்டிய நடைமுறை உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்த அளவுகோல்களுக்கு அப்பால் செல்லக்கூடாது, அத்துடன் மருத்துவத் துறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளுக்கு அப்பாலும் செல்லக்கூடாது.
  • இந்த முக்கியமான விடயத்தில் அரசாங்கம் பல்வேறு விவாதங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வந்தாலும், இதுவரை ஒரு திட்டவட்டமான முடிவை எடுப்பதில் தாமதம் காட்டுவது புரிந்துகொள்ள முடியாதுள்ளது.
எழுத்து அளவு:

உலகப் புகழ்பெற்ற நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றவும், இலங்கை முஸ்லிம்களின் இறுதிச் சடங்குகள் அவர்களின் மத நடைமுறைகளுக்கு ஏற்ப நடத்தப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு 'ஒரு நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம்' உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது இந்தக் கோரிக்கை​ அரசாங்கத்திடமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்...

இலங்கையில் பிறந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் அல்லது வேறு எந்த தேசிய இனத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் அவர்கள் இறந்த பின்னர் தங்கள் தாயகத்தில் கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்பை வழங்காமல் இருப்பதும் இலங்கையரை, வேறொரு நாட்டில் வலுக்கட்டாயமாக அடக்க நடவடிக்கை எடுப்பதும் ஒரு பெரிய அவமானமாக இருக்கும்.

அத்தகைய முயற்சியை ஒரு நாடாக இலங்கை எடுக்குமாயின் உலக நாடுகள் இலங்கையை கடுமையாக குறைத்து மதிப்பிடும்.

கொவிட் தொற்றுநோயால் இறக்கும் இலங்கை முஸ்லிம்களை அடக்கம் செய்ய இலங்கை அரசாங்கம் மாலை​தீவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான செய்திகளைப் பற்றி ஒரு நியாயமான சமுதாயத்திற்கான தேசிய இயக்கம் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தது, மேலும் ஒரு அமைப்பாக நாம் எமது தாய்நாட்டை இப்படி இழிவுபடுத்துவதால் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறோம்.

கொவிட் 19 வைரஸால் இறக்கும் ஒருவரின் இறுதிச் சடங்கில் பின்பற்ற வேண்டிய நடைமுறை உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்த அளவுகோல்களுக்கு அப்பால் செல்லக்கூடாது, அத்துடன் மருத்துவத் துறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளுக்கு அப்பாலும் செல்லக்கூடாது.

எந்தவொரு பிரச்சினையின் அடிப்படையிலும் இதுபோன்ற பாரபட்சமற்ற நிலைப்பாடுகளை நாம் எடுத்தால், அது நமது தாய்நாட்டை நாகரிக உலக சமூகத்திலிருந்து அந்நியப்படுத்துகிறது. இது குறித்து ஆழ்ந்த புரிதல் இலங்கை அரசுக்கு இருக்க வேண்டும்.

இந்த முக்கியமான விடயத்தில் அரசாங்கம் பல்வேறு விவாதங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வந்தாலும், இதுவரை ஒரு திட்டவட்டமான முடிவை எடுப்பதில் தாமதம் காட்டுவது புரிந்துகொள்ள முடியாதுள்ளது.

இலங்கையில் முஸ்லிம்கள் பாகுபாடு காட்டப்படுகிறார்கள் என்று வெளி உலகில் மதிப்பிழந்த ஒரு கருத்தை உருவாக்க இது ஊக்குவிக்கிறது.

இலங்கைக்கு எதிராக செயற்பட முற்படும் எந்தவொரு தீவிரவாத சக்திகளுக்கும் தேவையான இடத்தை இது உருவாக்குகிறது.

உலகெங்கிலும் உள்ள பல முக்கிய நகரங்களில் இலங்கைக்கு எதிராக ஏற்கனவே நடந்த போராட்டங்களில் கவனம் செலுத்துவதன் இதனை தெரிந்துகொள்ளலாம்.

அதன்படி, நீதி, நியாயம் மற்றும் மனிதநேயம் என்ற பெயரில் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்குமாறு ஒரு நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற நிபுணர்களின் ஆலோசனையின் பேரில், உலக சுகாதார அமைப்பு (W.H.O) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் இறுதிச் சடங்குகள் அவர்களின் மத சடங்குகளுக்கு ஏற்ப, தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி நடத்தப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஒவ்வொரு இலங்கையருக்கும் மரணத்திற்குப் பிறகு தனது தாயகத்தில் அடக்கம் செய்யும் உரிமை இருக்க வேண்டும்! கரு ஜெயசூரிய | Tamil Leader | We Lead the Nation