Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பது குறித்த தீர்மானத்திற்கு அரசாங்கத்திற்குள் வலுக்கும் எதிர்ப்பு!

T

The Leader Desk

டிசம்பர் 21, 2020 • 5:37 PM

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பது குறித்த தீர்மானத்திற்கு அரசாங்கத்திற்குள் வலுக்கும் எதிர்ப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • "சந்தர்ப்பவாத அரசியல் எதிர்ப்பு களையப்பட்டு, ஒரு நேர்மறையான சமூக சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் ஒரு பயிற்சியாக இது மாற்றப்பட வேண்டும்" என முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட கூறியுள்ளார்.
  • "அனைத்து மத மற்றும் தேசிய பழக்கவழக்கங்களுக்கு மதிப்பளிப்போம்" என்ற தலைப்பில் டிசம்பர் 16 புதன்கிழமை வெளியான லங்காதீப பத்திரிகையில் எழுதிய பத்தியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
  • ”சக்தி உதவியற்றது, ஆனால் பொறுமை முடிவுக்கு வரக்கூடிய ஒரு இடம் இருக்கிறது.
எழுத்து அளவு:

"சந்தர்ப்பவாத அரசியல் எதிர்ப்பு களையப்பட்டு, ஒரு நேர்மறையான சமூக சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் ஒரு பயிற்சியாக இது மாற்றப்பட வேண்டும்" என முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட கூறியுள்ளார்.

 "அனைத்து மத மற்றும் தேசிய பழக்கவழக்கங்களுக்கு  மதிப்பளிப்போம்" என்ற தலைப்பில் டிசம்பர் 16 புதன்கிழமை வெளியான லங்காதீப பத்திரிகையில் எழுதிய பத்தியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக முஸ்லிம்கள் இறந்தால் அவர்களின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் குறித்து வலுவான விவாதம் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் சமூக கலாச்சாரங்களுக்கு மரியாதை உள்ள உயர் சமூகமாக நடுநிலை தீர்வை எட்டுவது பொருத்தமானது என வலியுறுத்தியுள்ளார்.

அயல் வீட்டாரின் மரணத்தை நல்லிணக்கத்திற்கான முதல் படியாக மாற்ற முன்மொழிந்துள்ள இலங்கையின் இந்தியாவிற்கான உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட,  வைரஸால் ஏற்படும் ஆபத்துக்களைக் கருத்திற்கொண்டு உடலை தகனம் செய்வதற்கான தீர்மானமானது, முஸ்லிம்களின் நம்பிக்கைகளுக்கு சவாலாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது எதிர்காலத்தில் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் முன்னாள் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

”சக்தி உதவியற்றது, ஆனால் பொறுமை முடிவுக்கு வரக்கூடிய ஒரு இடம் இருக்கிறது. இது வெறுப்பாக இருக்கக்கூடும்."

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை  அடக்கம் செய்ய உலகின் பிற நாடுகள் அனுமதித்துள்ளது எனவும், சுட்டிக்காட்டியுள்ள அவர், மேலும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு இந்த விடயத்தில் தடை விதிக்கப்படுவது பிரச்சினைக்கு வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார்.

முஸ்லிம் உடல்களை தகனம் செய்வதற்கான அரசாங்கத்தின் கொள்கை மற்றும் மாலைதீவில் புதைகுழியை தேடும் ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து நீதி அமைச்சர் அலி சப்ரி சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பது குறித்த தீர்மானத்திற்கு அரசாங்கத்திற்குள் வலுக்கும் எதிர்ப்பு! | Tamil Leader | We Lead the Nation