Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

மீனவர்களின் பிரச்சினை தீராவிடின் அமைச்சுப் பதவியை தூக்கி எறியவும் தயங்க மாட்டேன்! டக்ளஸ்

T

The Leader Desk

டிசம்பர் 21, 2020 • 8:33 AM

மீனவர்களின் பிரச்சினை தீராவிடின் அமைச்சுப் பதவியை தூக்கி எறியவும் தயங்க மாட்டேன்! டக்ளஸ்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்திய எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்ற நிலையில் நேற்று அங்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • அதேவேளை, கடந்த காலங்களில் இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது, தமிழக மக்களினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கள் மறக்க முடியாதவையாக நன்றிக்குரியவையாக இருக்கின்ற போதிலும், எமது மக்களின் வாழ்வாதாரமும் எமது கடல் வளமும் அழிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
  • தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் உணர்வு ரீதியான விடயமாக தனக்கு அமைந்திருப்பதாக தெரிவித்ததுடன் இவ்விடயத்தில் இந்தியத் தரப்பினரே தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

இந்திய எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்ற நிலையில் நேற்று அங்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் உணர்வு ரீதியான விடயமாக தனக்கு அமைந்திருப்பதாக தெரிவித்ததுடன் இவ்விடயத்தில் இந்தியத் தரப்பினரே தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, கடந்த காலங்களில் இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது, தமிழக மக்களினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கள் மறக்க முடியாதவையாக நன்றிக்குரியவையாக இருக்கின்ற போதிலும், எமது மக்களின் வாழ்வாதாரமும் எமது கடல் வளமும் அழிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

இதன் காரணமாகவே அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்குமாறு முனவைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், எல்லை தாண்டுகின்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தொடர்ந்தும் மேற்கொள்ளுவது தொடர்பாக கடற்படை தளபதியுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், கைது செய்யப்படுகின்றவர்களை கௌரவமாக நடத்துமாறு கடற்படை தளபதியைக் கேட்டுக் கொண்டதாகவும், கைது செய்யப்படுகின்றவர்களை தனிமைப்படுத்துவதற்கு பொருத்தமான பாடசாலை ஒன்றினை ஏற்பாடு செய்து தருமாறு வடக்கு ஆளுநரிடம் கோரியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சுருக்கு வலை மற்றும் வெளிச்சம் பாயச்சுதல் போன்ற தடை செய்யப்பட்டதொழில் முறைகளும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் எனவும்அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மீனவர்களின் பிரச்சினை தீராவிடின் அமைச்சுப் பதவியை தூக்கி எறியவும் தயங்க மாட்டேன்! டக்ளஸ் | Tamil Leader | We Lead the Nation